தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18 ந்தேதி வெள்ளத்தில் தாமிரபரணி கரை மட்டுமல்லாமல் அருகில் உள்ள கிராமங்களிலும் வெள்ளம் புகுந்தது. வல்லநாடு ஊருக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இங்குள்ள நூலகம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் இங்குள்ள சுமார் 5 ஆயிரம் நூல்கள் நனைந்து விட்டது. இந்த நூல்களை காயவைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வர நூலகர் தளவாய் முயற்சி எடுத்து வருகிறார். ஆனாலும் நூல் கட்டமைப்பு அவிழ்ந்து பயனற்று உள்ளது. இந்த நூலகத்துக்கு தேவையான நூல்களை வழங்க வேண்டும் என்று இந்த ஊரில் உள்ள வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


