தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16, 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதிகனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் மக்களை நி்லை குலையச் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்புகளின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வீனஸ் வாட்டர் ஹீட்டர் நிறுவனத்தின் சார்பில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.


