உருகுலைந்து கிடந்த முத்தாலங்குறிச்சி சிவன் கோயில் அர்ச்சகர் சேகர் வீட்டை பார்த்தேன் எனது மனது கனத்தது. அந்த குடும்பத்தின் நிலைப் பற்றி முத்தாலங்குறிச்சி லெட்சுமி நரசிம்மர் கைங்கர்ய சபையிடம் கூறினேன். லெட்சுமி நரசிம்மர் வாட்ஸ் அப் பக்கத்தில் பதிவு செய்தோம். நரசிம்மரின் பக்தர்கள் பெருவாரியாக உதவி புரிந்தனர். சேகர் குடும்பத்துக்கு மிக்ஸி ஒன்றை சபையின் தலைவர் சோமசுந்தரம் அ ய்யா வழங்கினார். ராமனுச சேசன் அவர்கள் சேகர் வீட்டுக்கு தேவையான பெயிண்ட உபகரணங்களை வாங்கி தந்தார். இதுபோன்ற பல உதவிகளை முத்தாலங்குறிச்சி லெட்சுமி நரசிம்மர் கைங்கர்ய சபையினர் செய்தனர். பொருள்களை சேகர் குடும்பத்துக்கு வழங்கினோம். உதவிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி – முத்தாலங்குறிச்சி காமராசு


