செய்துங்கநல்லூர் பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கேஷியர் ஆவுடையம்மாள். இவரது குடும்பத்தினர் எப்போதும் உதவி செய்வதில் முன்னணியாக விளங்குபவர்கள். யாருக்கு என்ன உதவி என்றாலும் உடனே செய்வார்கள். தற்போது அம்மா தனது மூத்த மகன் சாப்ட்வேர் இன்சினியர் கௌசிக் முத்துகுமாரோடு அமெரிக்காவில் உள்ளார். இளைய மகன் ஸ்ரீ நந்து குரு பராடோ வங்கியில் இந்தியாவில் பணியாற்றி வருகிறார். அம்மாவின் ஆசைக்கிணங்க சகோதரர்கள் இருவரும் இணைந்து தாமிரபரணி வெள்ளத்தில் பாதிக்கப்ட்டவர்களுக்கு உதவி புரிய என்னை நாடினார்கள். அவர் கொடுத்த தொகையை கொண்டு செய்துங்கநல்லூர் ஜவுளி கடை அதிபர் இம்ரான் பாயிடம் சேலைகளை வாங்கினோம். அவர் நாங்கள் கொடுத்த பணத்திற்கு இரண்டு மடங்கு சேலையை எங்களுக்கு கொடுத்து உதவினார். அதை கருங்குளம் ஒன்றியம் மு. கோவில்பத்து பஞ்சாயத்து படுகையூரில் மிகவும் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களை சேர்ந்த 125 பேருக்கு வழங்கினோம். இதற்கு எனது நண்பர் மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் தனி அலுவலர் ராமசந்திரன் உதவினார். மேலும் செய்துங்கநல்லூர் பகுதியில் துப்புறவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் 25 பேருக்கும் சேலைகளை வழங்கினோம். இந்த உதவியை செய்த அம்மா ஆவுடையம்மாள் அவர்களுக்கும், அவரது புதல்வர்கள் கௌசிக் முத்துகுமார், ஸ்ரீநந்து குரு ஆகியோருக்கு நன்றி. எங்களுக்கு உரிய நேரத்தில் தரமான சேலைகளை வழங்கிய இம்ரான் பாய் அவர்களுக்கும், மக்களுக்கு கொடுக்க உடன் உதவிய நண்பர் ராமசந்திரன் அவர்களுக்கும் நன்றி- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


