தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதிக்கு உட்பட்ட சூசை நகர், சுனாமி காலனி, ஜேஎஸ் நகர், பொட்டல்காடு ஆகிய பகுதிகளில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் நேற்று ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். ஆய்வின் போது, மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, திமுக பகுதி செயலாளர் மேகநாதன், வட்டச் செயலாளர் பிரசாந்த் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.


