அனில் கபூர் (டிசம்பர் 24, 1959) ஒரு பிரபல இந்தியத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார் . இவரது தகப்பன் சுரீந்தர் கபூர் ஒரு தயாரிப்பாளர் ஆவார். சகோதரனான போனி கபூரும் ஒரு தயாரிப்பாளர். இன்னொரு சகோதரரான சஞ்சை கபூரும், மகள் சோனம் கபூரும் திரைப்பட நடிகர்களாக உள்ளனர்.அனில் கபூர் 1979 இல் இருந்து நடித்து வருகிறார்.


