பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்களில் மொத்த வாக்குசாவடிகளில் 10 சதவீதத்திற்கு மிகாத இயந்திரங்களை தேர்தல் பயிற்சி மற்றும் விழிப்புணர்விற்காக மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று அனுப்பி வைத்து தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் முடிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1622 வாக்குசாவடி மையங்களுக்கு 10 சதவீதத்திற்கு மிகாமல் 163 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குசீட்டு ஒப்புகை இயந்திரங்கள் இன்றைய தினம் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு எடுக்கப்பட இருக்கிறது. இந்த இயந்திரங்கள் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாவட்டத்தில் உள்ள 7 மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விளக்க மையங்களில் வைக்கப்பட உள்ளது.
விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் உள்ள விளக்க மையங்களில் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் வரை விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலக பொறுப்பாளர் அக்னஸ், அ.இ.அ.தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. ரவி, தூத்துக்குடிவடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. ராஜேந்திரன், அ.இ.அ.தி.மு.க. மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் சரவணபெருமாள், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சிவராமன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி கிஷோர்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


