சியாம் பெனகல் (14 டிசம்பர் 1934) ஒரு இந்திய இயக்குனரும், திரைக்கதையாளரும் ஆவார். இவர், “மத்திய திரைப்படங்கள்” என்ற புதிய பதம் உருவாகக் காரணமானவர். ஆனால் அவர் இந்த பதத்தை விரும்பவில்லை. அவர் புதிய அல்லது மாற்று என்ற பதத்தையே விரும்பினார். மேலும் இவர் 2006 முதல் 2012 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவையின் நியமன உறுப்பினராவும் நியமிக்கப்பட்டார்.
அவருக்கு 1976ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 1991ம் ஆண்டில் அவருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது, 2007ம் ஆண்டில் இந்திய திரைப்படத்துறையின் மிகப் பெரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி அரசு இவரைக் கவுரவித்தது. இவர் உருவாக்கிய ஆங்கூர், மந்தன், நிஷாந்த், ஜூனோன், ஆரோஹன் உள்ளிட்ட ஏழு இந்தி திரைப்படங்களுக்கு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். அத்துடன், கேன்ஸ், பெர்லின், மாஸ்கோ சர்வதேச திரைப்படவிழாக்களிலும் இவர் விருது பெற்றுள்ளார்.


