ரானா தக்குபாடி (14 டிசம்பர் 1984) இவர் ஒரு தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழித் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் லீடர், கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும், ஆரம்பம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ராணா 14 டிசம்பர் 1984ஆம் ஆண்டு சென்னை தமிழ்நாட்டில் பிறந்தார். இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டக்குபாதி சுரேஷ் பாபுவின் மகன் மற்றும் நடிகர் வெங்கடேசின் அண்ணன் மகன் ஆவார். பழம்பெரும் தயாரிப்பாளர் தக்குபாத்தி ராமாநாயுடு இவரின் தாத்தா ஆவார்.


