ஆதி ( டிசம்பர் 14, 1982) இந்திய திரைப்பட நடிகராவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடிக்கின்றார்.தமிழ் திரைப்பட உலகில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு ஷங்கரின் தயாரிப்பில் உருவான ஈரம் படம் புகழைத் தேடித்தந்தது.
பிலிம்பேர் விருதுகள் தென்னகத்திற்கான இரண்டு பரிந்துரைகளுக்கு கூடுதலாக நந்தி விருது மற்றும் SIIMA விருது பெற்றவர் .
மார்ச் 2022 இல், பினிசெட்டி யாகவராயினும் நா காக்க மற்றும் மரகத நாணயம் ஆகிய படங்களில் இணைந்து நடித்த தனது நீண்ட நாள் காதலியும் நடிகையுமான நிக்கி கல்ராணியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் . அவர்கள் 18 மே 2022 அன்று திருமணம் செய்து கொண்டனர் .


