தூத்துக்குடியில் உலக மாற்றுத்தினாளிகள் தினவிழா மேயர் ஜெகன் பெரியசாமிதலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக மாற்றுத்திறனாளி முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோர் வாய் பேச முடியாத நலச்சங்கம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
விழாவில் தொழிலதிபர் விவேகம் ரமேஷ் முன்னிலை வகித்தார். விழாவில் 30பயனாளிகளுக்கு ரூ1.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் வழங்கினார். இதில், தமிழ்ச்செல்வன், தனசேகர், அந்தோணி, பாரத், டேவிட் காட்டு ராஜா, அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், சமூக சேவகர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் அரிராகவன், திருஇருதய திருச்சபை நண்பர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.


