எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாவட்ட ஆட்டசியர் லட்சுமிபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மகாகவி பாரதியாரின் 142-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் மகாகவி எட்டயபுரம் மகாகவி பாரதியாரின் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


