ஆர்யா (டிசம்பர் 11, 1980) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட 25க்கும் மேல்பட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். ஆர்யாவிற்கும் சாயிஷாவிற்கும் மார்ச் 10, 2019 அன்று திருமணம் நடந்தது.
இவர் டிசம்பர் 11, 1980ஆம் ஆண்டு காசர்கோடு , கேரளாவில் பிறந்தார். இவருக்கு சத்யா, என்ற ஒரு இளைய சகோதரன் உள்ளார். அவரும் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.நடிகை சாயிசா என்பவர் திருமணம் செய்து கொண்டார்.ஆர்யாவின் இயற்பெயர் ஜம்ஷத் சேதிராகத் என்பதாகும். பிறந்த ஊர் திரிகரிபுர், காரசகோடு. கேரளா. பெற்றோர் பெயர் உமர் செதிராகாந்த்-ஜாமிலா செதிரா காந்த்.


