செய்துங்கநல்லூர் தொழில் வர்த்தகர் சங்கத்தினர் சென்னை மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வியாபாரிகளிடம் பொருள் சேகரிக்கப்பட்டது. சங்க தலைவர் அய்யப்பன் தலைமையில் சங்கத்தினர் கடைகடையாக சென்று பொருள்களை சேகரித்தனர். இதில் அரிசி, பருப்பு, பிஸ்கட், உள்பட பல்வேறு பொருள்கள் சேகரிக்கப்பட்டது. அதன் பின் இந்த பொருள்களை திருவைகுண்டம் உதவி வட்டாட்சியர் .அய்யனாரிடம் வழங்கினார்கள் . இந்த நிகழ்ச்சியில் தொழில் வர்த்தகர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.


