29 வயதுக்குள் தமிழகத்தில் நிஜ ஹீரோவாக வலம் வந்த நாயகன் அன்றைய நெல்லை மாவட்டத்தில் முக்கூடல் த,பி, சொக்கலால் ராம்சேட் பீடி அதிபர் தலைசிறந்த பாடகர் தனக்கென ஒரு மிகப் பெரிய இசைக் குழுவை வைத்திருந்தார்
இவர் பாடினால் கூட்டம் சொக்கிப் போகும் இசைக் கச்சேரிகளுக்கு எல்லாரும் பணம் வாங்குவார்கள் ஆனால் இவரோ கச்சேரி முடிந்ததும் பணத்தை அள்ளிக்கொடுத்துச் செல்வார் தனது மன அமைதிக்காக இசைக் குழுவை ஆரம்பித்தவர்
சில நினைவுத் துளிகள் பிரபல தொழில் அதிபர் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தார் தொழில் அதிபர் மகன் பல்லாவரம் அருகே காரோடு புளியமரத்தில் மோதியதில் உயிரிழந்தார் அந்த சம்பவம் இவரை மிகவும் பாதித்தது தன்னைக் கண்டு அதே போல் வேகமாக காரை ஓட்டியதால் இச்சம்பவம் நடந்ததாக நம்பினார்
ரூபாய்த் தாள்களை எரித்து பொங்கல் வைத்தார் இது அவரது பணத்திமிரைக் காட்டுவதாக பெரும் சர்ச்சை எழுந்தது
அந்தக் காலத்தில் பல முன்னணி நடிகைகள் இவருடன் காரில் ஒன்றாக பயணிப்பதை பெருமையாகக் கருதினார்கள் இதனால் பல நடிகர்கள் பிரபலங்களின் கோபத்துக்கு ஆளானார்
யானைக்கு அல்வா கிண்டிப் போடுவதைப் போல என யாரோ வேடிக்கையாக சொன்னதை உண்மையாக்க யானைகளுக்கு அல்வாவை செய்து உணவாக அளித்தார்
மறைந்த அறிவானந்த பாண்டியன் அவர்களின் தகப்பனார் SSகந்தசாமி பாண்டியன் நாடார் அவரது சொந்த ஊரான கொம்மடிக் கோட்டையில் ஒரு கோயிலில் இசைக்கச்சேரி செய்யுமாறு இவரை அழைத்தார்
கொம்மடிக்கோட்டை கந்தசாமி பாண்டியன் இல்லத்திற்கு காமராஜர் பலமுறை வந்திருக்கிறார் பெருந்தலைவரும் இவரும் நெருங்கிய நண்பர்கள் அரசுப் பள்ளி ஒன்று நிலம் இருந்தா கட்டிவிடலாம் அய்யா என அதிகாரிகள் காமராஜர் காதில் விஷயத்தை சொல்ல அதுக்கென்ன நம்ம கந்தசாமி இருக்கான்ல அரசாங்க ஸ்கூல் கட்டணும் அதுக்கு இடம் குடுண்ணேன் என்ற பெருந்தலைவரின் உத்தரவை ஏற்று சற்றும் தாமதிக்காமல் பல ஏக்கர் நிலம் கொடுத்தார் கந்தசாமி பாண்டியன் நாடார் அந்தப் பள்ளி இன்றும் இயங்குகிறது
கொம்மடிக்கோட்டையில் வியாபாரிகள் கொடிகட்டிப் பறந்த காலம் அது
கந்தசாமிப் பாண்டியன் நாடார் காமராஜரின் நண்பர் என்பதை அறிந்த ஹரிராம் சேட் அழைப்பை மறுக்க இயலாமல் கச்சேரி செய்ய ஒப்புக் கொண்டார் கணீர் குரலில் மணப்பாறை மாடுகட்டி என்ற பாடலில் வரும் விருதுநகர் வியாபாரிக்கு என்ற வரிகளை கொம்மடிக்கோட்டை வியாபாரிக்கு வித்துப்போட்டு பணத்தை எண்ணு என மாற்றிப் பாடியதாகவும் பெரும் கரகோஷம் எழுந்ததாகவும் செய்திகள் உண்டு இதே போல அப்போது பல முக்கிய இடங்களில் மறக்க இயலாத கச்சேரிகளை பணமே வாங்காமல் நடத்தினார்.


