தூத்துக்குடியில் நவீன கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்பநல கருத்தடை சிகிச்சை இருவார விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


