இடையன்விளையில் நடந்த கால்நடை சிறப்பு மருத்துவ முகாமை ஊராட்சி மன்ற தலைவர் கிங்ஸ்டன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள கச்சனாவிளை ஊராட்சிக்குட்பட்ட இடையன்விளையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் சமுதாய பண்ணைப் பள்ளியின் சார்பில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கச்சனாவிளை ஊராட்சி மன்ற தலைவர் கிங்ஸ்டன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.
டாக்டர் சரண்யா மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் அண்ணமகாராஜன், தொழில்சார் சமூக வல்லுநர் ஜாக்குலின் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஊராட்சிக்குட்பட்ட கால்நடை களுக்கு சிகிச்சை அளித்தனர். ஏற்பாடுகளை கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குநர் செல்வக்குமார் , ஊராட்சி மன்ற தலைவர் கிங்ஸ்டன், ஊராட்சி செயலர் பர்னபாஸ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


