திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் வரையில் கடந்த 2021ம் ஆண்டு சுமார் 200 கோடி மதிப்பில் தொழில்வழிச்சாலை திட்டத்தின் கீழ் சாலைப்பணிகள் தொடங்கியது.
இந்த பணிகளை பொறுத்தவரை சாலைகள் இருபுறமும் இரண்டு அடி அகலம் அதிகரிப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும் உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வருடம்தோறும் திருவிழா நாட்களில் பாதையாத்திரையாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் இந்த சாலையின் இடதுபுறம் நடைபாதை இரண்டு அடி அகலத்திற்கு அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர், தூதுகுழி பகுதிகளில் இந்த பணிகள் தற்போது நடந்து வருகிறது.
வருகின்ற தைப்பூசத்திருவிழா காலங்களில் திருச்செந்தூர் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் நடைபயணமாக வருகை தருவார்கள். அதற்கு இந்த பணிகளை முடிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


