தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் சார்பில் வர்த்தக ரெட்டிபட்டி சோமசுந்தர நடுநிலைப்பள்ளி மாணவமாணவிகளுக்கு டெலஸ்கோப் பயிற்சி அளிக்கப்பட்டது.
நடுநிலைப்பள்ளி 6-8வகுப்பு மாணவர்களுக்கு வானியல் கருத்துக்களை பரப்புவதற்கும்,தொலைதூர காற்றாலை கோபுர உச்சியில் சுழலும் திசைகாட்டி மையும் அதில் எழுதியிருக்கும் எழுத்துக்களையும் டெலஸ்கோப்பில் பார்வையிடுவதற்கும் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடிஅஸ்ட்ரோ கிளப் தலைவர் எழிலன்தலைமை வகித்தார்.
சோமசுந்தர நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் செந்தடி முன்னிலை வகித்தார்.
ஆசிரியர் பேச்சியம்மாள் அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி செயற்குழு உறுப்பினர் முத்துசாமி மாணவர்களுக்கு வானியல் குறித்து பயிற்சி அளித்தார்.
இதில் பெற்றோர்கள் உள்பட மாணவர்கள்,ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


