கோவில்பட்டி மின் கோட்டத்துக்குள்பட்ட தெற்குப் பிரிவில் 2 இடங்களில் புதிய மின்மாற்றிகள் இயக்கி வைக்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம், பாண்டவா்மங்கலம் ஊராட்சி தென்றல் நகரில் சீரான மின்சாரம் கிடைக்கும் வகையில், ரூ.5.70 லட்சத்தில் 25கேவிஏ திறனும், ராம லட்சுமி நகரில் ரூ. 4 லட்சத்தில் 25 கேவி திறனும் கொண்ட 2 புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டன.
இவற்றை, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் (பொறுப்பு) தங்கராஜ் முன்னிலையில் மாவட்ட மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளா் குருவம்மாள் இயக்கி வைத்தாா். ஊராட்சித் தலைவா் கவிதா, உதவி செயற் பொறியாளா்கள் குருசாமி, மிகாவேல், உதவிப் பொறியாளா் லட்சுமிபிரியா, மின்வாரியப் பணியாளா்கள் பங்கேற்றனா்.


