தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டம் அயன்கரிசல்குளம் மஜ்ரா மாவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திரு.கிருஷ்ணசாமி (42) என்பவர் (20.11.2023) அன்று இரவு பந்தல்குடி அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து, மதுரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அன்னாரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சார்பில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.வி.மார்க்கண்டேயன் அவர்கள், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஜேன் கிறிஸ்டி பாய் அவர்கள், எட்டயபுரம் வட்டாட்சியர் திருமதி.மல்லிகாஅவர்கள் ஆகியோர் இன்று (23.11.2023) நேரில் சென்று அன்னாரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


