தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் வைர விழா ஆண்டுவட்ட கிளை மாநாடு நடைபெற்றது.
மாநாட்டிற்கு விளாத்திகுளம் வட்டத் தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் ராஜ் வரவேற்பு உரையாற்றினர். மாவட்டத் தலைவர் சுவாமிநாதன் துவக்க உரையாற்றினார், வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஞானராஜ், மாவட்டத் துணைத் தலைவர் ஜஸ்டின் செல்லத்துரை, மாவட்ட இணைச் செயலாளர் பாலமுருகன், தனி வட்டாட்சியர் பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநிலத் துணைத் தலைவர் செந்தூர் ராஜன் நிறைவுரையாற்றினார்.
வட்ட இணை செயலாளர். கோபாலகிருஷ்ணன் நன்றி உரையாற்றினார். இந்த மாநாட்டில் வருவாய் துறை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என்றும், அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கிட வேண்டும் என்றும், சரண்டர் பண பலன்களை ஊழியர்களுக்கு உடனடியாக வழங்கி விட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


