தூத்துக்குடியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டிகள் தருவைக்குளம் மைதானத்தில் நடைபெற்றது.
போட்டிகளை தருவைக்குளம் ஆலய பங்குதந்தை வின்சென்ட் அடிகளார் தலைமையில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன், காரப்பேட்டை நாடார் பரிபாலன சங்கத்தைச் சார்ந்த நவநீதகிரிஷ்ணன், காரப்பேட்டை நாடார் பெண்கள் மேல் நிலைப்பள்ளி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாணவர் பிரிவில் 60 அணிகளும், மாணவிகள் பிாிவில் 35 அணிகள் கலந்து கொண்டன.
விழாவில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் ஆலோசனை மரியான், தருவைக்குளம் அரசு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அமலதாசன், தருவைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மேலாண்மைக்குழு தலைவி அமலாவதி, தொழில் அதிபர் பிச்சையா, காமராஜர் நற்பணி மன்ற அமைப்பாளர் லாரன்ஸ்ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை தேசிய வாலிபால் நடுவர் தூத்துக்குடி விவிடி நினைவு மேல் நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சதீஸ் சந்திரன், தருவைக்குளம் அரசு மேல் நிலைப் பள்ளியின் உடற் கல்வி ஆசிரியர்கள் ரவிகாந்த், முத்துராஜன் மற்றும் காரப்பேட்டை நாடாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிாியா் பெமாலை பிாின்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.


