வள்ளியூரிலிருந்து அருகிலேயே இருக்கும் நமது மலை நம்பி மலை .நம்மில் பலர் பலமுறை சென்றுவந்த புண்ணியதலம்தான்…இருந்தாலும் அதன் சிறப்புகளை விவரிக்கும் பதிவு இது.
நம்பிமலை புராணங்களால் போற்றப்பட்ட முக்கியமான மலை. இதன் மீது அமைந் திருக்கும் திருமலைநம்பி கோயில், வைணவத் தலங்களில் பிரசித்திப்பெற்றது. மேற்கு மலைத் தொடரில் மகேந்திரகிரி மலைப் பகுதியின் ஓர் அங்கமா கத் திகழ்கிறது நம்பிமலை. மேனியெங்கும் பசுமையைப் போர்த்தியபடி விண்ணை முட்டும் அளவுக்குத் திகழும் மேற்குமலைத் தொடரின் ஒரு முகட்டில், ‘நம்பினோரைக் கைவிடேன்’ என்று அருளும் வண்ணம், கருணையின் பிறப்பிட மாகக் கோயில் கொண்டிருக்கிறார் திருமலைநம்பி.
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடிக்கு அருகிலுள்ள வைணவ திருத்தலம் திருக்குறுங்குடி. இங்கிருந்து களக்காடு செல்லும் வழியில் பெரிய குளம் ஒன்று உள்ளது. \`வட்டக் குளம்’ என்கிறார்கள். அதை யொட்டி வட்டப்பாறை அருகில் கோயில் கொண்டிருக்கிறார் சுடலை யாண்டவர். இவரை வழிபட்டுவிட்டு நகர்ந்தால், இந்தப் பகுதியிலுள்ள தோரண வளைவி லிருந்து தொடங்குகிறது நம்பிமலை பயணம்.
அடுத்துத் தொடரும் பயண வழியில் சிவசாமி ஆசிரமம், வெள்ளவேஷ்டி சாமி ஆசிரமம், அருள் ஜோதி ஆனந்த தியான பீடம் எனப் பல ஆசிரமங் கள் உள்ளன. வட்டக்குளத்திலிருந்து சுமார் 6 கி.மீ தூரத்தைக் கடந்தால் வனத் துறையின் செக் போஸ்ட் வருகிறது. அதைத் தாண்டி செல்ல தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
அங்கு,முறைப்படி பெயர் முதலான விவரங் களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அந்த இடத்துக்குமேல் வாகனங்களில் பயணிக்க இயலாது; சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு மலைப் பாதையில் நடக்கவேண்டியிருக்கும். சற்றுக் கடினமான பயணம்தான். எனினும், பக்தர்கள் திருமலை நம்பியின்மீது அதீத நம்பிக்கை யோடும் பக்தியோடும் மலையேறுகிறார்கள்.
பெரும்பாலும் மலைக் கோயில்கள் சித்தர்களால் சிறப்பு பெற்றது என்பார்கள். இந்த மகேந்திரகிரி மலைப்பகுதியிலும் அகப்பேய் சித்தர், கல்யாணி சித்தர் உள்பட பல சித்தர்கள் நித்யவாசம் செய்வ தாகவும், மனதாலும் புலன்களாலும் நன்கு பக்குவப்பட்டவர்கள், இங்குள்ள சித்தர்களின் அனுக்கிரகத்தைப் பெறலாம் எனவும் நம்புகிறார் கள், இப்பகுதி மக்கள். முன்னொரு காலத்தில் உலகம் சுபிட்சம்பெற சிவனும், பார்வதியும் தவம் செய்த இடம் இம்மலை என்பது கூடுதல் சிறப்ப


