இன்று (23.11.2023) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் காரணத்தினாலும் கன மழை எச்சரிக்கை உள்ளதாலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று 23.11.2023 ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது. உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி முதன்மை கல்வி அலுவலரால் பின்னர் அறிவிக்கப்படும்.
– மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி


