தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான ஆலயமான சிவகாமி அம்பாள் சமேத பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு வரை திருப்பணி இன்றி கிடந்தது. உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் வி.கோவில் பத்து, செய்துங்கநல்லூர் ஆன்மிக பேரரவை சார்பில் இந்த கோயிலில் திருப்பணி நடந்தது. கொடி மரம் வைக்கப்பட்டது. பள்ளிஅறை கட்டப்பட்டது. 63 நாயன்மார் சிலைகள் மீண்டும் சீரமைக்கப்பட்டது. கோயில் நூறு வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட அனைத்து திருவிழாக்களும் மீண்டும் நடத்தப்பட்டது. தற்போது திருப்பணி செய்து கும்பாபிசேகம் நடந்தது, பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரத்துவங்கியுள்ளனர்.
இந்த கோயிலை தென் தில்லை எனும் தென் சிதம்பரம் என்றும் அழைப்பர். இந்த கோயிலில் கார்த்திகை திருவிழா மற்றும் சஷ்டி திருவிழா நடந்து வருகிறது. நீண்ட நாள்களுக்கு பிறகு இந்த வருடம் சூரசம்காரம் நிகழ்ச்சி இந்த கோயிலில் நடந்தது. இந்த கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. அதன்பின் சிவன் சக்திக்கு திருக்கல்யாணம் நடந்தது.
பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் முத்துராமன், பாலா தலைமையில் குழுவினர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குரு மாரியப்பன் தலைமையில் ஆன்மிக பேரரவையினர் செய்திருந்தனர்.


