தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான ஆலயமான சிவகாமி அம்பாள் சமேத பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் சங்காபிசேகம் நடந்தது. சிவன் சக்தி மற்றும பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் முத்துராமன், பாலா தலைமையில் குழுவினர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குரு மாரியப்பன் தலைமையில் ஆன்மிக பேரரவையினர் செய்திருந்தனர்.


