தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் வருகிற 26ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் 2018-2020, 2019- 2021 மற்றும் 2022-2020 ஆம் கல்வி ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா 26.11.2023, ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணிக்கு வ.உ.சிதம்பரம் கல்லூரி கலையரங்கில் நடைபெறவுள்ளது.
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பி.மணிசங்கர் மாணவ, மாணவியர்களுக்குப் பட்டமளித்து உரையாற்றுகிறார். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் தலைவர், செயலர், முதல்வர், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் செய்து வருகின்றனர்.


