தூத்துக்குடி சிவன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியர் சன்னதியில் கந்த சஷ்டி திருவிழா கடந்த ஆறு நாட்களாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்யும் சூரசம்கார வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக சுப்பிரமணியசாமி திருக்கல்யாண வைபவம் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார் இதை தொடர்ந்து 16 வகை சீர்வரிசை பொருட்கள் கொண்டு வரப்பட்டு ஓம குண்டம் வழரக்கப்பட்டு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று அதற்கு பின்பு திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது பின்பு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது இந்த திருக்கல்யாண வைபவத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


