தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் இந்து நடுநிலைப் பள்ளி சார்பில் உலக சகிப்புத்தன்மை தின விழிப்புணர்வு பேரணிநடந்தது.
நாடு முழுவதும் நவ-16ம் தேதி உலக சகிப்புத்தன்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது. முடிவைத்தானேந்தல் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலக சகிப்புத் தன்மையை தினத்தை வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர். பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி ஆசிரியர்கள் சங்கரசுப்பு, திருமலை,பேச்சியம்மாள், முத்துலட்சுமி, டாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


