தூத்துக்குடியில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை சார்பில் நடை பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு டாக்டர் அருள்ராஜ் தலைமை வகித்தார். டாக்டர் ஆர்த்தி கண்ணன் முன்னிலை வகித்தார். பேரணியை டாக்டர் விஜயகுமார் துவக்கி வைத்தார். பேரணி மருத்துவமனை வளாகம் முன்பு துவங்கி பழைய பேருந்து நிலையம், மீனாட்சிபுரம் வழியாக மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.
பேரணியில் 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர். மாலையில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பட்டிமன்றம் நடந்தது. நிகழ்சிக்கான ஏற்பாடுகளை எஸ்ஏஎச் செவிலியர் கல்லூரி முதல்வர் எலிசபத் செய்திருந்தார்.


