சென்னை பெரியார்நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் சிவசுப்பிரமணியன்(66). இவர் சென்னையில் உள்ள டிவிஎஸ் கம்பெனியில் வேலை பார்த்து விட்டு தற்போது ஓய்வு பெற்று தனது குடும்பத்துடன் சென்னையில் குடியிருந்து வருகிறார்.
சிவசுப்பிரமணியனின் சித்தி உறவு முறையான சரோஜா என்பவரின் மகளான திருநெல்வேலி பெருமாள்புரம் காலனி 11வது குறுக்கு தெருவை சேர்ந்த நாகராஜன் மனைவி உஷா(63) என்பவரும் அவரது கணவர் நாகராஜன், சிவசுப்பிரமணியன் ஆகிய மூவரும் திருச்செந்தூரில் கந்த சஷ்டிக்காக காரில் கோவிலுக்கு சென்று விட்டு திருநெல்வேலிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திருநெல்வேலி திருச்செந்தூர் மெயின் ரோட்டில் ஆதிச்சநல்லூர் பாலம் அருகே கார் வந்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து ஆதிச்சநல்லூர் பாலத்தில் இருந்து 10 அடிபள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த உஷா மற்றும் உஷாவின் கணவர் நாகராஜன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
உடனே இந்த வழியாக வந்தவர்கள் ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு சப் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் மற்றும் போலீசார் சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நாகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் காயமடைந்த சிவசுப்பிரமணியம் மற்றும் உஷா ஆகியோர் திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


