முன்னீர் பள்ளத்தில் சிவன் கோயிலையும், விஷ்ணுகோயிலையும் பிரதிட்சை செய்து விட்டார்கள். மக்கள் நலமுடன் வாழ்ந்துவந்தனர். அந்தகாலகட்டத்தில் இவ்வூரில் பிள்ளைமார் சமூகத்தினை சேர்ந்தவர்கள் மிக அதிகமாக இருந்தார்கள். பூஜை செய்வதற்காக இவர்கள் வெளியே இருந்து பிரமாணர்களை கொண்டு வந்து குடியமர்த்தி அக்கிரகாரமும் அமைத்து விட்டார்கள். காலங்கள் கடந்தது.
இந்த ஊரில் இருந்த அம்மன் இவர்களை ஆட்டிப் படைக்க ஆரம்பித்தாள். ஆகவே ஊரில் நோய் புகுந்தது. அடிக்கடி கலரா போன்ற கொடிய நோய் வந்து மக்களை ஆட்டிப்படைத்தது. இது எதனால் என அறிய ஆய்வு செய்தனர் இவ்வூர் மக்கள். இதற்காக கேரளாவில் இருந்து நம்பூரிதிகளை அழைத்து வந்தனர்.
நம்பூரிதிகள் பரிபூரணேஸ்வர் கோயில் அமர்ந்து பெரிய யாகத்துக்கு ஏற்பாடு செய்தனர். “ஊரில் என்ன குற்றம் உள்ளது. மக்கள் குற்றமா? அல்லது தெய்வ குற்றமா?” என அறிய வேண்டும் என அவர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். தேவாதி தேவர்களை யாகத்துக்கு அழைத்து காரணம் கேட்டனர்.
பூஜை நடந்து கொண்டிருக்கிறது. எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஆனாலும் நம்பூரிதிகள் மனந் தளராமல் பூஜைகளை மிகப் பிரமாண்டமாக செய்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த பிரமாண பெண் ஒருத்தி தீடீரென்று எழுந்தாள். பின் அருள் வந்து ஆட ஆரம்பித்தாள். அதோடு மட்டு மல்லாமல் வாய் திறந்து பேசவும் ஆரம்பித்து விட்டாள். “நான் தான் வீரபாண்டி செல்லாயி வந்திருக் கிறேன். இந்த ஊரில் அமர்ந்து அருள் பாலிக்கிறேன். என்னை வணங்குகள். உங்களை முள்மொறிவு இல்லாமல் காப்பாத்து கிறேன்” என்று கூறினாள்.
அதன் பிறகு தான் இவ்வூருக்கு வீரபாண்டி செல்லாயி அம்மன் கோயில் பிரதிட்சை செய்யப்பட்டது. இதற்காக சிவன் கோயில், பெருமாள் கோயில் கட்டப் பயன்படுத்திய கற்களில் மீதமுள்ள கற்களை கொண்டு இந்த கோயிலை கட்டினர்.
காலங்கள் கடந்தது. பிள்ளைமார் கட்டுப்பாட்டுக்குள், பிரமாணர்கள் வணங்கும் தெய்வமாக வீபாண்டி செல்லாயி அம்மன் கோயில் விளங்கியது. படிப்படியாக இந்த கோயிலுக்கு ஒவ்வொரு ஊரில் இருந்தும் மற்ற இனத்தவர்கள் வந்து குடியேறினர்.
செட்டியார் சமுகத்தினை சேர்ந்தவர்கள் தான் முதலில் வந்தார். அதன் பின் யோகீஸ் வரர்கள் வந்தார்கள். தொடர்ந்து யாதவர் சமுதாயத்தினை சேர்ந் தவர்கள் வந்தார்கள். இப்படியாக படிப்படியாக அனைத்து சமுதாயத் தினை சேர்ந்த மக்களும் வந்து சேர்ந்தனர்.
இவ்வூரில் இரண்டு வகையான மறவர் இனமக்களும் வந்து குடியேறினார்கள். ஆப்ப நாட்டில் இருந்து இரண்டு பிரிவாக வந்தவர் களில் ஒரு பிரிவினர் நான்குநேரி அருகில் உள்ள கன்னி மார் குளத்தில் குடியேறினார்கள். அவர்கள் தான் மருகால் குறிச்சியில் கன்னியாத்து பங்காளி என்று அழைக்கப் படுபவர்கள்.
மற்றொரு பிரிவினர் அருணாபுரம் காட்டுக்குள் இருந்த வீரளபெருஞ் செல்வியில் குடியேறி னார்கள். அவர்கள் அங்காள பரமேஸ்வரியை வணங்கி வந்தார்கள். இவர்கள் ரெட்டியார்பட்டி, மூலைக் கரைப்பட்டி, மூனைச்சிபட்டி உள்பட பல ஊர்களில் குடியேற ஆரம்பித் தனர்.
அதில் இருந்து மூன்று குடும்பமாக ஊருக்கு வந்தவர்கள் மொத்தம் ஆறு பங்காளியாக முன்னீர் பள்ளத்தில் வசித்து வருகி றார்கள்.
அவர்கள் இங்கு வேலை செய்து கொண்டிருக்கும் போதே அவர்களது குல தெய்வத்தினை தங்கள் வாழும் இடத்தில் பிரதிட்சை செய்து ஊருக்கு சற்று தென் மேற்கே தற்போது போலீஸ் ஸ்டேஷன் உள்ள பகுதிக்கு மேற்கே வைத்து வணங்க ஆரம்பிததனர். இந்த கோயிலை பொறுத்தவரை 21 பூடங்கள் போட்டு வணங்கப்பட்டது. கூட்டுறவு தெய்வங்கள் என போற்றப்பட்டது.
இந்த சமயத்தில் தான் நமது முன்னீர் பள்ளம் கவுன்சிலர் செல்வசங்கர் அவர்களின் பூட்டனார் சங்கரலிங்க தேவர் என்பவர் அந்த ஊரில் வசித்து வந்தார். இவர் மிகவும் அமைதியானர். நியாயத்துக்கு கட்டுபட்டவர். சிறந்த பக்திமாமன். இவர் வீரபாண்டி செல்லாயி சாமியாடும் பிரமாண பெண் வீட்டில் கூலி வேலை மற்றும் நிலபுலன்களை காவல்செய்யும் வேலையை செய்து வந்தார்.
கிட்டத்தட்ட அந்த வீட்டில் பெரியவர்கள் ஏவும் வேலையை இவர் செய்து வந்தார். விவசாய வேலை, மாடு பராமரிப்பு, பால் கறப்பது , விளைநிலங்களை காவல் கப்பாது என அந்த வீட்டுக்கு பிரியமான வேலைக்கரராக இருந்துவந்தார். நியாமானவராக இருந்த காரணத்தினால் வீட்டில் உள்ள அனைவர் மத்தியிலும் நல்ல பெயர் பெற்று இருந்தார். ஆகவே இவரை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நினைத்து வந்தனர்.
வீரபாண்டி செல்லாயி அம்மனுக்கு அந்த காலத்திலேயே கொடை விழா கிடையாது. திருமால் பூஜை தான் பங்குனி மாதம் தோறும் நடைபெறும். அந்த சமயத்தில் கோயில் சாமியாடியான பிரமாண ர்பெண் கோயிலுக்கு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே அவர் என்ன செய்ய என்று யோசித்து வந்தார்.
தங்களது வீட்டில் வேலை பார்த்த சங்கரலிங்க தேவரை அழைத்தார். “சங்கலிங்கா நீ போய் வாய்க்காலில் குளித்துவிட்டு வீட்டுக்கு வா” என்றார்.
அவரும் பாளையங்கால்வாயில் குளித்து விட்டு வீட்டுக்கு வந்தார். “சரி. எங்கள் வீட்டுக்குள் உள்ள பூஜை அறைக்குள் செல். அங்கே உள்ள பிரம்பு மற்றும் திருநீர்கொப்பறையை எடுத்துக்கொள்”. என்ன சொல்கிறார்கள் என புரியாமல் அதிர்ந்து நின்றார் சங்கரலிங்க தேவர் “நீ தான் இனிமேல் எனக்கு பதில் வீரபாண்டி செல்லாயி கோமரத்தாடி. உன்னை தொடர்ந்து உன் குடும்பத்தினர்தான் இந்த கட்டளையை செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.
“குருவும் குழையும் கொடுப்பது” என்று சொல்வார்களே அதுபோலத்தான் இந்த செயலும், அந்த பிரமாண பெண் சங்கரலிங்க தேவரை, “வீரபாண்டி செல்லாயி அம்மனின் கோமரத்தாடி நீ தான்” என அனுப்பி வைத்தார்.
ஆனால் ஊர் காரர்கள் ஏற்க வேண்டுமே. ஆதிக்க சாதிகள் வாழும் இடம். இங்கு பூர்விக மக்கள் இருக்கிறார்கள். ஆப்ப நாட்டில் இருந்து வந்த தேவரை எப்படி ஏற்றுக்கொள்வார்.
அந்த காலத்தில் கோயிலுக்குள் பரமணர்களும், பிள்ளைமார்களையும் தவிர வேறு எவருமே உள்ளே செல்ல முடியாத நிலை இருந்த காலம். எப்படி தேவர் சமுதாயத்தில் பிறந்த இவரால் கோயிலுக்கு செல்ல இயலும். ஆனாலும் இவர் உடலில் புகுந்த வீரபாண்டி செல்லாயி அம்மனுக்கு முக்காலமும் தெரியும். ஆகவே சங்கரலிங்க தேவரை எப்படி பெருமை படுத்த வேண்டும் என்றும் அம்மனுக்கு தெரியும். ஆதாளி போட்டு அங்கிருந்து கிளம்பினார் சங்கரலிங்க தேவர்.
ஆனால் ஊரார்கள் இவரை வழி மறித்து கோயிலுக்கு செல்ல முடியாமல் தடுத்தனர். அவர் அம்மன் கோட்டைக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.
ஆனாலும் அம்மன் அருளால் அவர் சாமி யாடிக்கொண்டிருந்தார்.
பிள்ளை சமுதாயத்தினரும், பிரமாணர் சமுதாயத்தினரும் ஒன்று கூடி யோசித்தார்கள். ஆடும் சாமியை அவர்களால் நிறுத்த முடியவில்லை. ஆனாலும் அவரை சோதிக்க முடிவு செய்தனர்.
“சரி. நீ உண்மையான சாமியாடியாக இருந்தால் நாங்கள் உனக்கு சோதனை வைக்கிறோம். அந்த சோதனையை முடித்து நீ உயிரோடு இருந்தால் உன்னை சாமி யாட வைக்கிறோம்” என்றனர்.
அதற்கு சரி என ஒத்துக்கொண்டார் சங்கரலிங்க தேவர்.
அந்த விஷ பரிட்சைத்தான் என்ன? அதில் இருந்து உயிர் தப்பினாரா சங்கரலிங்கதேவர்.
(நதி வற்றாமல் ஓடும்)


