முன்கதை சுருக்கம்
ராஜதுரையின் கிராமத்தில் எதிரிகள் தீ வைத்தனர். அடிக்கடி தீ வைக்கிறார்கள் இனிமேல் ஓலை குடிசை கட்டக்கூடாது என ராஜதுரையின் ஊர் மக்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். இதனால் சொந்தமாக செங்கல் சூளை உருவாக்கும் முதலாளியை ஊருக்கு கூட்டிக்கொண்டு வருகிறார்கள். அனைவருக்கும் ஓடு வீடு கட்டிகொடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் ராஜதுரை. அவனை மற்ற சமூகத்தினர் பொறாமையில் கொலை பலியில் சிக்க வைத்து விடுகிறார்கள். இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து சிற்றாற்றங்கரைக்கு ஓடினான் ராஜத்துரை. அங்கே உள்ள அரண்மனையில் ராஜதுரையை வேலைக்கு சேர்த்து விட்டாள் அவள் அக்காள் கற்பகம். ஆனால் கற்பகம் மீது காம மோகம் கொண்ட தலைமை காவலன் அவள் கற்பை சூறையாட நாள் குறித்தான். எதிர்பாராத விதமாக அவனும் கொலையாகிறேன். அந்த பலியும் அவன் மேல் விழுகிறது. எனவே போலிசுக்கு பயந்து சென்னை ஓடுகிறான். அங்கு சுவாமி தாஸ் நாயுடு என்பவரை சந்திக்கிறான்.
இனி.
61. முத்துகிளி கண் பார்வை சந்திரன் மீது பட்டது.
சுவாமி தாஸ் அழகில் மயங்கி மேலை நாட்டு பெண் மிகவும் மோகம் கொண்டாள். அவள் பெயர் மார்க்ரெட். சுவாமி தாஸை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாள். தனது ஆசையை வாயை விட்டு அவரிடம் கூறியும் விட்டார்.
ஆனால் சுவாமி தாஸ் மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்து போனாள் மார்க்ரெட்.
ஆனாலும் வெட்கத்தினை விட்டு அவரிடம் பேசுகிறாள். என்னை எப்படியாவது திருமணம் செய்து கொள்ளுங்கள் என கெஞ்சினாள் அந்த ஆங்கில பெண்.
ஆனால் சுவாமி தாஸ் அவளது காதலை நிராகரித்துவிட்டார். அதற்காக அவள் செய்த வேலைகள் எதுவுமே இவரிடம் பலிக்க வில்லை. மொத்தமாக மார்கரெட்டை நிராகரித்து விட்டார். ஆகவே அழுத முகத்துடன் அவரை மீண்டும் தேடி வருகிறார்.
“மிஸ்டர் சுவாமி தாஸ் நான் உங்கள் காதலித்தேன். ஆனால் நீங்கள் என்னை காதலிக்க வில்லை. என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை. தெரிந்தோ தெரியாமலோ நான் காதலித்து விட்டேன். எங்கள் ஊர் வழக்கம். பிடிக்கவில்லை என்றாலும் என்னோடு இருந்து விடுவார்கள். அது தான் கலாச்சாரம். ஆனால் உங்கள் ஊர் கலாச்சாரம் என்னை ஏறெடுத்து பார்க்க மாட்டேன் என்கீறிர்கள். ஆகவே என் காதல் தோற்று விட்டது. ஆனாலும் எனக்கு நீங்கள் சரியான பரிசு ஒன்றை தரவேண்டும். அந்த பரிசு என்னால் மறக்க முடியாத பரிசாக இருக்கவேண்டும்”.
சுவாமி தாஸ் யோசித்தார். “இந்த ஆங்கிலப்பெண் ஏடாகூடாமாக ஏதாவது கேட்டு விட்டால் நான் என்ன செய்வேன்” என்று யோசித்தார்.
ஆனாலும் அந்த பெண் விட வில்லை. “மிஸ்டர் சுவாமி தாஸ் நான் கேட்பதை நீங்கள் தருவீர்களா?. மாட்டீர்களா?” என்று கேட்டாள்.
“சரி என்ன தான் கேட்கிறாள் பார்ப்போமே” என நினைத்துக்கொண்டு, அவளை நோக்கி “உனக்கு என்ன வேண்டும் சொல்” என்றார்.
ஆனால் அவள் விட வில்லை. “பேச்சுக்கு கூறி விட்டு என்னை ஏமாற்றி விடக்கூடாது எனவே பிராமிஸ் செய்யுங்கள்” என்று சத்தியம் கேட்டாள்.
“என்னடா இவள் விடக்கண்டன் , தொடக்கண்டனாக இருக்கிறாள்” என் நினைத்துக்கொண்டார். ஆனாலும் அவள் சொல்லை தட்ட இயலவில்லை. இறுதியில் சத்தியம் செய்து கொடுத்தார்.
அப்போது அவள் தனக்கு வேண்டிய பொருளை கேட்டாள்.
ஆம் அவள் . ‘உங்களின் தலை முடி எனக்கு வேண்டும்’ என்றாள்.
நாயிடுவுக்கு ஆச்சரியமாக போய் விட்டது. ‘என்னடா இது மயிருக்கு வந்த சோதனை’. என நினைத்தார்.
அதோடு மட்டுமல்லாமல், “ காதலுக்கு வந்தவள் மயிரோடு போனாளே”. அதுவே போதும் என மயிரே போச்சு என்ற நிலைக்கு வந்தார்.
மேலை நாட்டு பெண் மார்க்கரெட்டை நினைத்து பார்க்கிறார். அவள் தன்னை காதலித்தது அவளது சுதந்திரம். தான் அவளை காதலிக்க மாட்டேன் என்று சொன்னது தன்னுடைய சுதந்திரம். அவளின் காதலை ஏற்றுக்கொள்ள இயலாமல் இருந்தாலும் கூட, அவளுடைய ஆசையை நிறைவேற்ற நினைத்தது மனிதாபிமானம். ஆனாலும் அந்த பெண் தன்னிடம் எதை நேசித்தால், எதற்கு இப்படி கண்மூடித்தனமாக இருக்கிறாள் என்று நினைத்திருந்தார். கடைசியில் தனது தலை மயிர் மீது இத்தனை ஆசை வைத்திருக்கிறாளே என நினைக்கும் போது சிரிக்கவா? அல்லது அழவா? என தெரியாமல் தவித்தார்.
‘உனக்கு எத்தனை தலை முடி வேண்டுமோ எடுத்துக்கொள்’. என்றார்.
கண்ணீர் மல்க நாயுடு அருகில் வந்தாள் அந்த மேலே நாட்டு பெண். அழகாய் அவருடைய தலை முடியை கோதி விட்டார். அதன் பின் தன் கையில் அவரது முடியை அளந்து பார்த்து கண்ணீர் மல்க நின்றார்.
அவளின் செயல் பரிதாபமாக இருந்தது. பாவம் இந்த பெண் சுவாமி தாஸ் நாயுடுவை காதலித்தாளா? அல்லது அவரது தலை முடியை காதலித்தாரா? அல்லது மனகுழப்பத்துக்கு அழாகி உள்ளாளா? என பலவாறாக நினைத்தார்.
ஆனால் அந்த பெண் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.
அவருடைய தலைமுடியின் நீண்ட ஒரு முடியை மட்டும் வெட்டி எடுத்துக் கொண்டாள். அதன் பின் அவளால் அழுகையை நிறுத்தி முடியவில்லை. அங்கிருந்து ஓடி விட்டாள். சுவாமி தாஸ் நாயுடுவுக்கு மனதுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.
காலங்கள் கடந்தது. இவர் இந்தியாவுக்கு கிளம்பினார். அப்போது அந்த மேலை நாட்டுப்பெண் இவரை பார்க்க விமான நிலையம் வந்தார்.
அப்போதும் அவளது கண் சிவந்து இருந்தது.
இவருக்கு அவளிடம் கேட்க வேண்டும் என்று ஆசை. “அடிப்பாவி பெண்ணே என்னிடம் இருந்து வெட்டிக்கொண்டு போனாயே அந்த தலை முடியை எங்கேடி வைத்திருக்கே” என கேட்க ஆசைப்பட்டார். ஆனால் அதைப் எப்படி கேட்க என்பது தான் அவருக்கு யோசனையாக இருந்தது.
ஆனாலும் இவர் கண் அவளை நோக்கி சென்றது. இவர் கண்களில் எதையோ கேட்கிறார் என்பதை புரிந்துகொண்ட அந்த பெண் , தனது கழுத்தில் கிடந்த ஒரு பாசி மாலையை தூக்கி காட்டினாள். அதில் ஒரு தாயத்து போன்ற ஒன்று இருந்தது. அந்த தாயத்து தங்கத்தினால் ஆனாது. அந்த தாயத்துக்குள் இவரது நீண்ட முடியை வைத்து அடைத்து தன் கழுத்தில் போட்டிருந்தாள்.
ஆகா இது அல்லவா காதல்.
அதை அவள் காட்டியவுடன் நாயுடு சந்தோசத்தின் உச்சிக்கே சென்று விட்டார். இவள் அல்லவா காதலி, நாடு கடந்து, கடல் கடந்து, கண்டம் விட்டு கண்டம் வந்து, இங்கே நான் கண்ட இந்த பெண் என் மீது எவ்வளவு தீவிர பற்று வைத்து இருக்கிறாள். இவளை மணமுடிக்க மாட்டேன் என்று சொன்னது கூட தவறோ. ஒரு வேளை இவளை நாம் மணந்திருந்தால் என்ன தப்பு என யோசித்தார் நாயுடு.
பாவம் காலம் கடந்து விட்டது. இதோ விமானம் இந்தியாவுக்கு பறக்க தயராகி விட்டது. சில காதல் சில வேளைகளில் கானல் நீராக மாறிவிடும். அதுபோலவே சுவாமிதாஸ் மார்க்கரெட் காதல்.
இந்திய விமானம் வந்து விட்டது. பயணிகள் அதில் ஏற அறிவிப்பு ஆங்கிலத்தில் ஒலிபரப்பானது.
தற்போது மார்க்கரெட்டை உண்மையாகவே காதலித்தார் நாயுடு. ஆனால் என்ன செய்வது இந்த வேளையில் மீண்டும் காதலை இவரால் புதுப்பிக்க இயலவில்லை. அது ஒரு தலை காதலாகவே மாறிவிட்டது. இவரும் பிரியா விடை பெற்று இந்தியா வந்தார்.
உயரத்தில் விமானம் பறக்க முயற்சிக்கும் போது, கேபினை பார்க்கிறார் நாயுடு. அங்கே அந்த பெண் மர்க்கரெட் இவரை பார்த்து அழுத விழிகளுடன், தனது கழுத்தில் கிடந்த தங்கத்தாயத்தினை கையில் பிடித்த மாதிரி நின்று கொண்டிருந்தாள்.
சிறிது நாள் அவளை மறக்க முடியாமல் தவித்தார். சுவாமி தாஸ்.
இந்த காதலுக்கு சொந்த காரர் தான் சென்னையில் இருக்கிறார். அவரோடுதான் நமது ராஜத்துரையும் வந்திருக்கிறார்.
ராஜத்துரை வந்து வீட்டில் இறங்கியவுடனே அவரது வெளிநாட்டு காதலை பற்றி கூறி விட்டனர்.
வீட்டுக்குள் நுழைந்து சிறிது நேரத்தில் அவரை நோக்கி ஒரு பெண் வந்தாள். அந்த பெண்ணும் வெள்ளைக்காரித்தான்.
ஆனால் அந்த வெள்ளைக்காரி தமிழில் அதுவும் நெல்லைத் தமிழில் பேசினார்.
“திருநெல்வேலியில இருந்து வந்திருக்கது நீங்கத்தானா?” என்றாள் அவள்.
ஒரு வெள்ளைக்காரி நெல்லைத்தமிழ் பேசுகிறாளே என ஆச்சரியத்துடன் பார்த்தார் ராஜத்துரை.
அவளும் இவரை பார்த்தாள். இருவருக்குள் ஏதோ ஒரு வித ஈர்ப்பு தோன்றியது.
*******
பாளை அரசு ஆஸ்பத்திரியில் அகஸ்தீஸ்வரன் சாரிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தான் சந்திரன். ராஜத்துரை செய்யாத கொலை குற்றத்துக்கு சென்னை சென்று அங்கே ஒரு வெள்ளைக்காரியை சந்தித்தார் என ருசிகரமாக வரலாற்றை முடித்துவிட்டார் வாத்தியார். இவனுக்கு தனது தாத்தாவின் கதையை விடாமல் கேட்க வேண்டும் என்ற ஆசை கிளம்பியது.
“சார்வாள், இன்றைக்கு விடிந்து விட்டது. இன்னும் எங்க தாத்தாவோட கதையையே நீங்க முடிக்கலை. இன்னும் என் பூர்வீகத்தையும் நீங்க சொல்லலை. ஆனால் வெளிநாட்டு காதல் அந்த காதல் இந்த காதலுன்னு வேறவேற கதையெல்லாம் சொல்லுதீய. என் குடும்ப வரலாற்றை சொல்லுங்க”. மனது வேதனையுடன் கேட்டான் சந்திரன்.
சிரித்தார் அகஸ்தீஸ்வரன்.
“ஏடேய் சந்திரா. உன் குடும்ப வாரிசு சாதரண வாரிசா என்ன? டேய் நீங்க இந்த சமுகத்துக்கு பல தொண்டாற்றி இருக்கிய. அதே நேரம் பல நாடு சுற்றி, பல பேருக்கு உதவி புரிஞ்சி இருக்கிய. அந்த வரலாற்றை நான் கண்டிப்பா சொல்லணும். சொன்னத்தான் நீ எவ்வளவு பெரிய குடும்பத்துல பிறந்து இருக்கன்னு நல்லா தெரியும். அதுபோல எவ்வளவு பெரிய தியாகியோட வாரிசுகளுன்னு தெரியும். அதான் உனக்கு நான் விரிவா சொல்லிக்கிட்டு வாறேன்”.
அகஸ்திஸ்வரன் சார் சொல்லுவது, சந்திரனுக்கு உடன்பாடாக தெரியவில்லை.
“சார்வாள் சொன்ன தப்பா நினைக்க மாட்டியளா? அந்த வாசு தாத்தா என்னை பாத்து அடிக்கடி நீ சாதி கெட்டவன், சாதி கெட்டவன்னு படாத பாடு படுத்துறாரு. நான் நாடன் பேரன் குடும்பத்துக்காரன் தானே. என் அப்பா, தாத்தா எல்லோரும் இங்க பிறந்தவிய தானே. எங்க முன்னோர்கள், இங்க பனை யேறின பனையேறிக தானே”. வெறித்தனமாக கேட்டான்.
“எல்லாம் சரித்தான். நீ சொல்றதும் எல்லாம் சரித்தான். அதே நேரம் வாசு சொல்றதும் சரித்தான். இதற்கெல்லாம் விடை சீக்கிரம் கிடைக்கும். இன்னைக்கு ராத்திரி திரும்பவும் வாரேன். உனக்கு உன் குடும்ப வரலாற்றை சொல்லுதேன். ஆனா நீ நினைக்கிற மாதிரி உன் குடும்ப வரலாறு சாதரண வரலாறு இல்லை . அது தலை முறை தலைமுறையா ஜெயித்த வரலாறு. அதனால நீ கொஞ்சம் பொருமையாக இருந்து தான் கேட்கணும்”.
சந்திரன் மிகவும் நொந்து போனான்.
“சேய். என்னடா மனிசன் இவரு. படிச்சவருன்னா இப்படித்தான் பொத்தி பொத்தாம் பசலியா பேசுவாங்க போலிருக்கு. ஆனா கிராம புறத்தான இருக்கிற வாசு தாத்தா என்னோட மனசு நோகுற மாதிரி பேசுறாரே. அதுக்கு ஒரு முடிவு கட்டவேண்டாமா?” எழுந்தான்.
இருவரும் மாடியை விட்டு கீழே இறங்கினார்கள். அருகில் உள்ள டீ கடையில் டீ வாங்கி கொடுத்தான். அவனும் குடித்தான்.
அகஸ்தீஸ்வரன் சாரை வழி யனுப்பி வைத்தான். “இன்று ரத்தினம் அய்யாவுக்கு ஆஞ்சியோ பண்ண போகிறார்கள். எனவே அதிகாலையில் அவர் பிரசர், சுகர் என அனைத்து டெஸ்டும் எடுக்கணும். இன்னைக்கு அவரு வெறும் வயித்தோடத்தான் இருக்கணும். நேற்றே டாக்டர் சொல்லிட்டாங்க”
அவர் அறைக்கு பரபரப்பாக ஓடியே வந்தான். அவர் அதற்குள் குளித்து விட்டு வந்திருந்தார்.
அதிகாலையில் முத்துக்கிளியும் வந்து விட்டாள். அப்பாவுக்கு காலையிலேயே ஆஞ்சியோ அறைக்கு கொண்டு செல்லவேண்டும். எனவே அவளும் சாப்பாடு எதுவும் தாயார் செய்யாமல் ஒடியே வந்து விட்டாள்.
அவருக்கு வெள்ளை வேஷ்டி, சட்டை போட்டு தயார் நிலையில் வைத்திருந்தனர். முகத்தினை ஷேவ் செய்த காரணத்தினால் முழுக் என இருந்தார். மீசை இல்லாமல் இருந்த அவரை பார்க்க சகிக்க முடியவில்லை.
அப்பாவை பார்த்தவுடன் அவள் கண்களில் நீர் வழிந்தது. எப்படி தோரணையாக இருந்த அப்பா. தொடர்ந்து அவருக்கு பிரச்சனை. “கடந்த வருடம் என்னால் பிரச்சனை. இப்போது நெஞ்சு வலியால் பிரச்சனை. ஆண்டவனே. என் தந்தையை காப்பாற்று”
அப்பா அருகில் போய் உட்கார்ந்தாள். “அப்பா ஆஞ்சியோகிராமம் பண்ணும் போது தாங்கிங்கிவீங்களா?” கையை இறுக்கி பிடித்துக்கொண்டாள்.
“தாங்கித்தானே ஆகணும்”. பேச்சுக்கு சொன்னாலும் அவர் கண்களிலும் பயம் தெரிந்தது.
“என்னமோ நரம்பு மூலமா மருந்து ஏத்துவாளாம். நரம்பு கிடைக்கலைன்னா தொடை வழியா ஏத்துவாங்களாம். வலி தாங்க முடியாதே. நீங்க எப்படி தாங்குவீங்க”. முத்துகிளி கண்களில் கண்ணீர் பொங்கியது. அப்பாவின் கைகளை இறுக்கப்பிடித்துக்கொண்டாள்.
சந்திரன் , அவர்கள் அருகில் வந்தான். “முத்துகிளி நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. தயவு செய்து கொஞ்சம் தள்ளி நிக்கீறீங்களா? நான் பார்த்துகிறேன்”.
தைரியத்தினை வரவழைத்துக்கொண்டு பேசினான். அவன் பேச்சுக்கு கட்டுபட்டவளாக எழுந்தாள்.
அப்பாவின் பெட்டை விட்டு இறங்கி சற்று தள்ளி நின்றாள். சிறிது நேரத்தில் சிப்பந்தி தள்ளு வண்டி கொண்டு வந்தார்கள். அந்த வண்டியில் ரத்தினம் ஏற்றப்பட்டார். ஆஞ்சியோ கிராம் செய்யும் இடத்துக்கு அவரை தள்ளி சென்றார்கள்.
“முத்துகிளி நீங்கள் அய்யா பொருளையெல்லாம் எடுத்துட்டு வாங்க. நான் அய்யா கூடபோறேன்” என்று தள்ளுவண்டி பின்னால் இவனும் பிடித்த படியே ஒடிப்போனான்.
தள்ளு வண்டி அந்த தியேட்டருக்குள் கொண்டு செல்லும் போது இவனை வெளியே நின்று கொள்ளச் சொன்னார்கள்.
உள்ளே ஏ.சி. மிக அதிகமாக இருந்தது. “பாவம் நாட்டுக்கட்டை. கிராமம் வயல்வெளி என இருந்தவர் . ஏ.சி குளிரை எப்படி தாங்கிப் கொள்ளப்போகிறாரோ தெரியலை”. கதவை திறந்தவுடனே குளிர் இவனையும் வாட்டியது.
உள்ளே என்ன நடக்கிறது என இவனுக்கு எதுவும் தெரியவில்லை.
வாசலில் நின்றான்.
தொடர்ந்து டாக்டர்கள் வரிசையாக உள்ளே நுழைந்தார்கள். சிப்பந்திகள் நுழைந்தார்கள். ஒவ்வொருவரும் உள்ளே போகும் போது கதவு ஈடுக்கு வழியாக பார்த்தான். உள்ளே அனைவரும் பரபரப்பாக இருந்தது தெரிந்தது. தள்ளு வண்டி தள்ளி சென்ற பெண் மட்டும் சொன்னாள், “இன்று 6 பேருக்கு ஆஞ்சியோ பண்ணப்போறாங்க” என்றாள்.
“அய்யா. எத்தனையாவது ஆளோ தெரியலை”
சந்திரன் வெளியே வந்தான். முத்துகிளி தனியாக நின்றாள். “என்ன வாசு தாத்தா வரலியா?”
“ம். கூம் அவர் பேத்திக்கு உடம்பு சரியில்லையாம். சேரகுளம் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போறாறாம்”.
மனதுக்குள் நினைத்துக்கொண்டான். “நாமும் முத்துக்கிளியும் தனியா இருக்கோம். பேசுறோமோ இல்லையோ தனியாவது இருக்கோம். அந்த மனுசன் இருந்தா என்னை ஏதாவது வேலை சொல்லி வெளியே அனுப்பியிருப்பாரு”.
வாசு தாத்தா வராமல் இருப்பது கொஞ்சம் மனதுக்கு இதமாக த்தான் இருந்தது.
மெதுவாக முத்துகிளி கேட்டாள், “அப்பாவுக்கு ஒண்ணும் பயமில்லையே”. அவள் கண்களில் இருந்து நீர் திவலைகள் வந்தது.
“பயப்படாதீங்க. நான் கூட இருக்கேமுல்லா”.
அமைதியாக இருந்தாள் “இதய ஆஞ்சியோ கிராம் என்றால் என்ன?” ஆச்சரியம் முத்துகிளி முதல் முதலில கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டாள். இதுதான் முத்துகிளியிடம் பேச சரியான நேரம் என பேச ஆரம்பித்தான்.
“இவன் என்ன டாக்டரா-?”. இருந்தாலும் ஆஸ்பத்திரியில் இவன் இருக்கும் வேளையில் பல்வேறு நபர்கள் ஆஞ்சியோ குறித்து விவரமாக பேசியதை எல்லாம் கேட்டு வைத்திருந்தான். அதோடு மட்டுமல்லாமல் இவருக்கு நெஞ்சு வலி ஆஞ்சிகிராமம் பண்ண வேண்டும் என்று சொன்ன உடனே யூ டியூப் பார்த்து விவரம் தெரிந்து வைத்திருந்தான். அதை விவரத்தை வைத்துக்கொண்டு முத்துகிளியிடம் பேச ஆரம்பித்தான் சந்திரன்.
“இங்க பாருங்க முத்துகிளி நீங்க பயப்படுற மாதிரி அப்பாவுக்கு பயப்படுற மாதிரி எதுவும் இல்லை. இப்போ இதய நோய் தலைவலி மாதிரிதான். இதற்கு நிறைய மருத்துவம் வந்தாச்சு. இருந்தாலும் நீங்க தெளிவாகனுமுன்னு நான் சொல்லுதேன்”.
சந்திரன் சொல்வதை கேட்க தாயரானாள் முத்துகிளி.
“இதய ஆஞ்சியோகிராம் என்பது இதய தமனிகள் எனப்படும் நோயாளி இதயத்தின் இரத்த நாளங்களைப் பார்க்க எக்ஸ்ரே படங்களை பயன்படுத்தும் ஒரு நுட்பமாகும். இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை இருக்கிறதா என்பதைப் பார்க்க பரிசோதனை செய்யப்படுகிறது. இது ஒரு சிகிச்சைத்தான். அதனால அதை நினைத்து நீங்க பயப்படாதீங்க”.
சந்திரன் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தாள் முத்துகிளி ஆனால் பேச வில்லை. எனவே அவளுக்கு நம்பிக்கை வரவில்லை என நினைத்தான். எனவே கொஞ்சம் விரிவாக பேசினான்.
இதய ஆஞ்சியோகிராம் சர்வதேச சிகிச்சை முறைகளின் ஒரு பகுதி இதய சிலாகையேற்றல் சிகிச்சை முறையாகும். அதைதான் அப்பாவுக்கு பண்ணப்போறாங்க. இதயம் மற்றும் இரத்த நாள நிலைகளை கண்டறிதல் மற்றும் சிகிச்சையளித்தல் என்பது இந்த சிகிச்சை மூலமாக நடைபெறும்”.
முத்துகிளி கவனம் சந்திரன் நோக்கி வந்தது.
“இதய ஆஞ்சியோகிராம் செய்யும் போது, எக்ஸ்ரே இயந்திரத்தால் கண்டறியக்கூடிய ஒரு சாய வகை இதயத்தின் இரத்த நாளங்களுக்குள் செலுத்தப்படுகிறது. எக்ஸ்ரே இயந்திரமானது இரத்த நாளங்களைப் பற்றிய விவரமான தோற்றமளிக்கும் படங்களை விரைவாக எடுக்கிறது. தேவைப்பட்டால், இதய ஆஞ்சியோகிராம் செய்யப்படும் அதே நேரத்தில் மருத்துவர் அடைபட்ட இதய தமனிகளை ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் திறக்க முடியும். அதைதான் இப்போது அப்பாவுக்கு செய்யப்போகிறார்கள்”.
இவன் சொல்வதை அருகில் உள்ளவர்களும் கவனித்தார்கள்.
பெரியவர் ஒருவர் சந்திரனிடம் கேட்டார். “தம்பி முதலில இந்த இதய நோய் பத்தி சொல்லுங்க. எனக்கு ஒண்ணுமே புரியலை”.
முத்துகிளிக்கு புரியவில்லை. எனவே பெரியவருக்கு சந்திரன் பதில் சொல்லட்டும் என காத்து இருந்தாள். சந்திரன் தொடர்ந்தான்.
“நெஞ்சு வலி போன்ற இதயத் தமனி நோயின் அறிகுறிகள் மூலம் மாரடைப்பு உங்களுக்கு தெரியும். பிற பரிசோதனைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு உங்கள் மார்பு, தாடை, கழுத்து அல்லது கைகள் ஆகியவற்றில் வலி ஏற்படும். அதிகமாக மார்பு வலி ஏற்படும். இது எல்லாம் தெரிஞ்சா உடனே நாம ஆஸ்பத்திரியில கொண்டு சேர்க்கணும். ஆஸ்பத்திரி வந்துட்டா நிச்சயம் நம்மல காப்பாததிருவாங்க”.
பெரியவர் கேட்டார்.
“ஆஞ்சியோ செய்யும் போது ரொம்ப வலிக்குமோ?”
“முதலில இது ஆபரேசனே கிடையாது. இது ஒரு வகையான இதய நரம்புகளில் உள்ள அடைப்புகளை நீக்கும் சிசிச்சையாகும். அதனால பயப்படவே வேண்டாம்”.
முத்துகிளி அவனை பார்த்தாள். நேற்று தன் தந்தைக்கு சந்திரன் செய்த பணிவிடை, பெற்ற மகன் செய்ய வேண்டிய பணிவிடை. எங்கிருந்தோ வந்த சந்திரன் செய்திருக்கிறான். யாருய்யா இவன். இவனுக்கும் முத்துக்கிளிக்கு என்ன தொடர்ப்பு?. அனைவரையும் யோசிக்க வைத்தது.
ஒரு மனிதனை ஆஞ்சியோகிராம் செய்ய எப்படியெல்லாம் தயார் படுத்த வேண்டுமோ, அதை இவன் தானே தயார் செய்து இருக்கிறான். தனது தந்தையாக ரத்னம் இருந்தாலும் எங்கோ பிறந்து இங்கே வந்த இவன் ஏன் இதையெல்லாம் செய்ய வேண்டும். நம்மை ஏன் மும்பையில் காப்பாற்ற வேண்டும். அதன் பிறகு கொரோனா காலத்தில் கார் டிரைவராக ஏன் ஊருக்கு வரவேண்டும். ஊரை விட்டு வெளியே போனானே. அப்போதே ஒரு சவாரி கிடைத்து மும்பைக்கு சென்று இருக்கலாமே. ஏன் நம்ம மாமா பனையில் இருந்து விழ வேண்டும். அதற்கு உதவி புரிய திரும்பி இவன் ஏன் மீண்டும் ஊருக்குள் வரவேண்டும். என்னை ஏன் சுற்றி சுற்றி வருகிறான். என் தந்தைக்கு ஏன் நெஞ்சடைப்பு வரவேண்டும். அவன் ஏன் ஆஸ்பத்திரிக்கு வந்து எங்களுக்கு உதவ வேண்டும். இவன் யார்?. இவன் யார்?”.
முத்துகிளி யோசித்தாள். அவள் மண்டைக்குள் ஏதோ ஒன்று செய்து கொண்டிருந்தது. “போன ஜென்மத்தில் இவனுக்கும் நமக்கும் ஏதாவது முடிச்சு இருக்குமோ. அதனால் தான் இந்த ஜென்மத்திலும் தொடர்கிறானோ?”.
முத்துகிளி யோசித்தாள்.
“எங்கப்பாவுக்கு ஒண்ணுமே செய்யாதுல்லா?” அப்பாவியாக சந்திரனிடம் கேட்டாள்.
“கவலை படாதீங்க முத்துகிளி. உங்கப்பாவுக்கு ஒண்ணும் செய்யாது. அவுகளுக்கு என்னவெல்லாம் பணிவிடை செய்யணுமோ அது எல்லாம் செஞ்சிட்டேன். அதனால நீங்க கூட இங்கே இருக்கணுமுன்னு அவசியமில்லை” சந்திரன் அமைதியாக சொன்னான்.
முத்துகிளி சந்திரன் முகத்தினை பார்த்தான். அந்த பார்வையில் அவன் என்ன செய்தான் என்பதை அவள் கேட்பது போலவே இருந்தது. அவன் ரத்னத்திற்காக என்ன செய்தான் என்பதை விவரிக்க ஆரம்பித்தான்.
“ஐயாவுக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நள்ளிரவுக்குப் பிறகு எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கொடுக்க கூடாது. அதை நான் சரியா பார்த்து எதுவும் குடிக்க விடலை. அய்யா சாப்பிடுற மருந்துகள் அனைத்தையும் டாக்டர் கிட்ட காட்டிட்டேன். அதை சாப்பிடலாமா? கூடாதா? ன்னு கேட்டுட்டேன்”.
நிறுத்தி விட்டு பேசினான்.
“நீரிழிவு நோய் இருந்த காரணத்தினால ஆஞ்சியோகிராம் செய்வதற்கு முன் இன்சுலின் அல்லது வாய்வழியாக மாத்திரை எடுக்கலாமா என டாக்டர் கிட்டே கேட்டுட்டேன். அய்யாவுக்கு ஏதாவது ஒவ்வாமை இருந்தால், மருத்துவரிடம் தெரிவிக்க சொன்னாங்க. நான் அய்யா கிட்ட கேட்டு அப்படி எதுவும் இல்லைன்னு சொல்லிட்டேன்”.
ஆச்சரியத்துடன் பார்த்தாள் முத்துகிளி.
“ஏற்கனவே நரம்பு வழியாக செலுத்தப்படும் சிறுநீரக எக்ஸ்ரேக்கள் மற்றும் சி.டி ஸ்கேன்களுக்குப் பயன்படுத்தப்படும் சாயம் மூலம் அய்யாவுக்கு இதுவரைக்கும் எந்த பாதிப்பும் இல்லைன்னு டாக்டர் ஆய்வு பண்ணி முடிவு பண்ணிட்டாங்க. அதையும் தெரிஞ்சி கிட்டேன்”.
“இத்தனை வேலை இருக்கிறதா? முத்துகிளிக்கு அதிசயமாக இருந்தது. ஒரு நோயாளி ஒருவர் சிகிச்சை எடுக்கிறார் என்றால் அவரோடு இருப்பவர் எவ்வளவு வேலை செய்ய வேண்டும். இந்த சந்திரன் மட்டும் இல்லையின்னா என் அப்பாவுக்கு இந்த வேலையை யார் செய்திருப்பா?” முத்துகிளி கண்களில் லேசாக கண்ணீர் வந்தது.
சந்திரன் தொடர்ந்து பேசினான்.
“இந்த சிகிச்சைக்காக கை அல்லது இடுப்பிலுள்ள பெரிய தமனியைப் பயன்படுத்தி செய்யப்படுவதால், இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள தோலை சவரன் செய்ய ஏற்பாடு நேற்று இரவே பண்ணிட்டேன். பயத்தைப் போக்க நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்படலாமுன்னு சொன்னாங்க. அதைப்பத்தியும் விசாரிச்சிட்டேன். பயமில்லைன்னு சொல் லிட்டாங்க”.
முத்துகிளிக்கு மனது மிகவும் இலகியது.
“மருத்துவ குழுவினர் இன்றைக்கு காலையிலேயே உடல் பரிசோதனை செய்து, இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு போன்ற உங்கள் முக்கிய அறிகுறிகளை அய்யா கூடவே நின்னு நான் பார்த்துட்டேன்”.
“அய்யாவை நல்லா சிறுநீர் கழிக்க நீங்ககொண்டு வந்த வெள்ளை வேஷ்டி சட்டையை அணிந்து, அய்யாவோட கண்கண்ணாடிகள், மோதிரம் எல்லாத்தையும் நான் கையில வாங்கிட்டேன். இந்தாங்க” என கண்கண்ணாடியையும் மோதிரத்தையும் கையில் கொடுத்தான்.
முத்துகிளிக்கு கண்ணிர் மூட்டிக்கொண்டு வந்தது. தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்.
“அழாதீங்க முத்துகிளி. ஒண்ணுமே நடக்காது. ஐயா தெளிவா குணமாகி வந்திருவாங்க. நிறைய பேருக்கிட்ட கேட்டுட்டேன். மது போதை, பீடி சிகரெட் அடிமையானவங்களுக்குத்தான் கஷ்டம். மற்றபடி குணமாகி வெளியே வந்த வுடனே நீங்க அய்யாவுக்கு நல்லா உணவு கொடுத்து பராமரித்தாலே போதும். அய்யா குணமாகி விடுவாங்க. அதுவும் நீங்க அழகா சமையல் செய்து தருவீங்களே சாலை மீனு கொழம்பு அதை வச்சி கொடுத்து, தினமும் மாத்திரையை ஒழுங்கா போட்டாலே போதும். அய்யா இன்னும் பல வருசங்களுக்கு நல்லா இருப்பாங்க”.
முத்துகிளி அவனை நோக்கி பார்த்தாள்.
“இதுவரைக்கும் நீங்க செஞ்சது எல்லாமே சரித்தான் ஆனா ஆஞ்சியோகிராம் செய்யும் போது என்ன நடக்குமோ?. எங்க அப்பா உடல் தாங்குமோ? என்னமோ தெரியலையே?. அதுவும் உள்ள அடப்பு இருந்தா பைபாஸ் பண்ணணுமுன்னு சொல்றாங்க. அதை நினைச்சா எனக்கு பயமா இருக்கு.”
அப்போது சிப்பந்தி ஒருவர் வந்தார். “எம்மா ரத்தினம் அட்டன்டர் யாரு?”
முத்துகிளியும் ரத்தினமும் ஓடினார்கள்.
“நீ யாரும்மா?”.
“அவரு மக?”
“நீ யாருய்யா, இவ புருசனா?”
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். “இல்லை சொந்தகாரன்”.
“சரி. அப்போ மக நீ ஒரு கையெழுத்தை போடு”.
முத்துகிளி கையெழுத்து போட்டாள்.
அந்த பெண் உள்ளே சென்றுவிட்டாள்.
முத்துகிளி. “கையெழுத்து எல்லாம் வாங்குறாங்களே. என்ன நடக்கப்போவுதோ தெரியலையே”. மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
“பயப்படாதீங்க முத்துகிளி. உள்ளே என்ன நடக்குமுன்னு எல்லாம் கேட்டு வச்சிருக்கேன். உங்க திருப்திக்காக நான் சொல்லுதேன் கேளுங்க”.
சந்திரன் என்ன நடக்கும் என்பதை முத்துகிளியிடம் விவரித்தான்.
“ஆஞ்சியோ எக்ஸ்ரே மேஜையில் மல்லாந்து நோயாளியை படுக்க வைப்பாங்க. அதுகப்புறமா நோயாளி கையில் ஒரு நரம்புக்குள் ஊசி குத்தப்படும். இதன்மூலம் இதயநோய் நிபுணர் மயக்க மருந்து அல்லது வலி நிவாரணி மருந்துகளை செலுத்துவார். நோயாளி மார்பு மற்றும் விரலில் ஒரு கண்காணிப்பு சாதனம் இணைக்கப்படும் . அதோடு மட்டுமில்லாமல் நோயாளி மூக்கில் உள்ள சிறிய குழாய்கள் வழியாக ஆக்சிஜன் செலுத்துவாங்க”.
அதை கேட்கும் போது முத்துகிளிக்கு கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.
“செருகும் இடத்திற்கு அருகிலுள்ள தோல், அநேகமாக கை அல்லது இடுப்பிலுள்ள தோல் பகுதியானது கிருமி நாசினிகளால் சுத்தம் செய்யப்படும், அதன்பின் நோயாளி உடலின் எஞ்சிய பகுதிகள் தியேட்டர் துண்டினால் மூடிருவாங்க”.
இப்போது முத்துகிளி மிகவும் கஷ்டப்பட்டாள். தனது மனக்கண் முன்னாள் ரத்தினம் தோற்றம் வந்து சென்றது.
“சாதாரண மயக்க மருந்து காரணமாக தமனிக்கு மேலேயுள்ள தோல் மற்றும் ஆழமான திசுக்கள் உணர்ச்சியற்றவையாக இருக்கும் மற்றும் ஒரு ஊசி தமனிக்குள் செலுத்தப்படும். இது சரியாக செலுத்தப்பட்டுள்ளது என்று இதயநோய் நிபுணர் திருப்தி அடைந்ததும், ஊசி வழியாக ஒரு வழிகாட்டி கம்பி தமனிக்குள் வைக்கப்படுகிறது. அதன்பின் ஊசி திரும்ப எடுக்கப்படுகிறது, இது வடிகுழாய் எனப்படும் மெல்லிய பிளாஸ்டிக் குழாயை கம்பியின் மேல் வைத்து தமனிக்குள் வைக்க உதவுகிறது”.
“மெல்லிய குழாய் மற்றும் கம்பி ஆகியவை சரியான நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்பதை இதயநோய் நிபுணர் எக்ஸ்ரே கருவிகளைப் பயன்படுத்தி உறுதிசெய்கிறார், அதன்பின் கம்பி திரும்ப எடுத்துக்கொள்ளப்படுகிறது”.
“அதன்பின் மாறுபட்ட ஊடகமான ஒரு சிறப்புச் சாயமானது மெல்லிய குழாய் வழியாக செலுத்தப்படுகிறது. அது செல்லும் பாதை எக்ஸ்ரேக்கள் எடுக்கப்படுகின்றன. எக்ஸ்ரே படங்களில் சாயத்தை எளிதாகப் பார்க்கலாம். இது நோயாளி இரத்த நாளங்கள் வழியாக செல்லும் போது, மருத்துவர் அது ஓடுவதைக் கவனித்து, ஏதேனும் அடைப்புகள் அல்லது சுருங்கிய பகுதிகள் இருக்கின்றனவா? என்பதை கண்டறிவார்”.
இது எல்லாமே முத்துகிளிக்கு அதிசமாக இருந்தது.
“நோயாளிக்கு ஆஞ்சியோகிராம் செய்யும் போது மருத்துவர் கண்டுபிடிப்பதைப் பொறுத்து, ஒரே நேரத்தில் பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது குறுகலான தமனியைத் திறக்க ஸ்டென்ட் வைத்தல் போன்ற கூடுதல் குழாய் வைக்கும் முறைகள் நோயாளிக்கு செய்வார்கள்”.
“அப்பாட” என பெரும்மூச்சி விட்டாள் முத்துகிளி. “ஏதோ நரம்பை தான் இதயத்துக்குள் விடுவார்களோ என பயந்து போய் இருந்தாள்.. ஆனால் சாயத்தினை தான் உள்ளே விடுகிறார்கள்” என்ற உடன் நிம்மதி அடைந்தாள்.
இவர்கள் பேசும் உரையாடல்களை அருகில் இருந்து கவனித்த பெரியவர் கேட்டார்.
“ஆமாம் ஒவ்வொருபேருக்கும் இந்த சிசிச்சை எவ்வளவு நேரம் நடக்கும்”. அவருக்கும் பதில் சொன்னான் சந்திரன்.
“ஒவ்வொரு நோயாளியின் நிலைமையும் வெவ்வேறானது அய்யா. சிகிச்சை எவ்வளவு சிக்கலானது அல்லது எவ்வளவு நேரடியானது என்பதைக் கணிப்பது எப்போதும் எளிதானதல்ல. சிகிச்சை செய்யப்படும் இடத்தைப் பொறுத்துதான் நேரத்தினை குறிப்பிடுவார்கள். உதாரணமாக, காலில் ஒரு பெரிய தமனியைப் பயன்படுத்தினால், இதைச் செய்ய 45 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை எடுக்கலாம். சிறிய தமனிகளைப் பயன்படுத்தினால், இது மிகவும் சிக்கலானதாகவும் அதிக நேரம் எடுக்கக்கூடியதாகவும் இருக்கலாம். ஒரு வழிகாட்டியாக எக்ஸ்ரே அறையில் மொத்தம் இரண்டு மணிநேரம் இருக்க வேண்டும்.” என்று கூறி முடிததான் சந்திரன்.
முத்துகிளி அமைதியாக இருந்தாள். சந்திரன் சொன்னான். “கொஞ்சம் பொறுங்கள் நீங்க கும்பிடுத கள்ளவாண்ட சுவாமியும் பத்திரகாளியம்மனும் உங்க அப்பாவை காப்பாத்துவாவ நீங்க பயப்படாதீங்க”.
அமைதியாக இருந்தாள். ஆனால் இந்த நேரத்தில் அவளுக்கு சந்திரனின் பேச்சும் துணையும் ஆறுதலாக இருந்தது. “உடன் பிறந்தவள் மூன்றுபேர். ஒருத்தியும் வரவில்லை. அவளது புருசமார் யாரும் வந்து எட்டிப்பாக்கலை. மும்பை வரைக்கும் நம்மள தேடிவந்த நம்ம அக்கா மவனும் வந்து எட்டிப்பாக்கலை. பரீட்சையின்னு போயிட்டான் ஆனால இங்க பாருங்க எவனோ ஒருத்தன் இங்க வந்து காத்து கிடக்கான். இவன் ஏன் எதுக்கு இங்க கிடக்கான்”.
முதல் முதலாக இவளது மனநிலை வேறு மாதிரி பேசியது. சொல்லப்போனால் சந்திரனை நேசித்தது. அது சரியா? தவறா? தெரியவில்லை. ஆனால் அவனை மிகவும் பிடித்திருந்தது.
“ஒரு வேளை சந்திரன் தன்னை காதலிக்கிறானோ?”
அவள் மனசாட்சி அவளிடம் பேசியது.
“அட பயித்திகாரி இது இவ்வளவு லேட்டாவ உனக்கு தெரியுது. அவன் உன்னை காதலிக்கிறான்டி. அதான் மும்பையை விட்டுட்டு உன் பின்னால சுத்துறாண்டி”. இவள் காதுக்குள் யாரோ சொல்வது போலவும் இருந்தது. ஆனாலும் அவளுக்கு இந்த காதல் கீதல் இதெல்லாம் அறவே பிடிக்கவில்லை.
ஆனால் சந்திரன் மனம் மட்டும் துடித்தது.
“நாம் இவளை காதலிக்கிறோம் என்பது அவளுக்கு புரியாமலேயா இருக்கு. இவளும் பெண்தானே. இவளுக்கு நம்மை சுற்றி சுற்றி ஒருத்தன் குட்டி போட்ட பூனை போல அலைகிறானே. அவன் காதலிக்கிறான் என்பது தெரியாமலேயா இருக்கிறது”.
ஆனால் பெண்கள் மனமே அப்படித்தான். மனதுக்குள் ஆயிரம் ஆசைகள் இருந்தாலும் பூட்டி வைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு தந்தை சொல்தான் மந்திரம். அதுவும் தாய் இல்லாத பெண்களை கேட்கவே வேண்டாம். தந்தையிடம் அடிமையாகியே இருப்பார்கள்.
முத்துகிளி மனது வேறு வகையில் குழம்பிக்கொண்டிருந்தது. நேரம் வேகமாக ஓடியது.
நிமிடங்கள் மணியாக கடந்தது.
தியேட்டர் கதவி திறக்கும் சத்தம் கேட்டது.
மருத்துவ மனை ஊழியர்கள் ரத்தினத்தினை ஸ்ட்ரெச்சரில் வைத்து வெளியே தள்ளிக் கொண்டு வந்தார்கள். அதைக்கண்டவுடன் ஓடிப்போய் சந்திரனும் முத்துகிளியும் இருபுறமும் நின்றார்கள். இருவரை பார்த்து புன்னகைத்தார் ரத்தினம். ஸ்ட்ரெச்சர் பின்னால் ஒடினார்கள். அவரச சிகிச்சை பகுதிக்கு அவரை கொண்டு சென்றார்கள். அந்த பகுதிக்குள் யாரையும் விட வில்லை. உள்ளே கொண்டு சென்று ஸட்ரெச்சரில் இருந்து படுக்கைக்கு இவரை மாற்றி வைத்தார்கள்.
ரத்தினத்தின் இதயத் துடிப்பு எண்ணிக்கையை அளவிடுதல் மற்றும் இரத்த அழுத்த அளவை சரிபார்த்தல் போன்றவகைக்கு கருவிகள் உடனடியாக பொருத்தப்பட்டு இயக்கப்பட்டது. சுற்றிலும் மருத்துவர்களும் நர்ஸ்களும் நின்று அந்த வேலையை செய்து கொண்டிருந்தனர்.
பிரச்சனைகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த்திய பின்னரே அங்கிருந்து நகர்ந்து சென்றனர். எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் மறு நாள் காலை வரை அவரை பாதுகாப்பாகவே வைத்திருப்பார்கள்.
அவருக்கு ரிசல்ட் வந்தவுடன் இதயத்தில் என்ன சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். மேல் சிகிச்சை என்ன செய்ய வேண்டும் என்றும் கூறுவார்கள். அதுவரை பொறுத்து இருக்கவேண்டும்.
சந்திரனும், முத்துகிளியும் பொறுத்து இருந்தார்கள். ஆனால் அதற்குள் வாசு வந்துவிட்டார்.
“என்னடே ஆபரேசன் முடிஞ்சிட்டா?”.
“ஆமாம் தாத்தா. ஐ.சி.சி ரூம்புக்கு கொண்டு வந்துட்டாங்க”.
சந்திரனையும் முத்துகிளியையும்பார்த்தார். அதன் பின் முத்துகிளியிடம் சொன்னார்.
“முத்துகிளி நீ உன் அப்பன் கூடபோய் நிக்க வேண்டியதுதானே”.
“அங்க யாரையும் விடமாட்டுகாங்க தாத்தா. ஏதாவது உதவின்னு கூப்பிட்டா மட்டும்தான்போணுமாம்”. முத்துகிளி சொல்லி முடித்தாள்.
“அப்படின்னா நாங்க இரண்டு பேரும் நிக்கோம். நீ வீட்டுக்குபோ. இங்க பொட்டபிள்ளைக்கு தனியா என்ன ஜோலி” முத்துகிளியை விரட்டினார் தாத்தா வாசு.
“இல்லை தாத்தா அப்பா கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு போகலாமுன்னு நிக்கேன். மத்தியானம் சாப்பாடு கொடுக்கணும்” மெதுவாக இழுத்து பேசினாள்.
“ஏடே சந்திரன். நீ. கீழே போய் ரத்தினத்துக்கு வென்னீ வாங்கி வை” என்று அவனை துறத்தினார்.
“இப்போ எதுக்கு வென்னி தாத்தா” சந்திரன் கேட்டான்.
“ஏடே தீடீருன்னு கேட்டா அங்க இங்க ஓடக்கூடாது பாத்தியா? முதலில வாங்கி வையிடே”. மிரட்டினார் வாசு தாத்தா.
மொத்தத்தில் முத்துகிளியையும் ரத்தினத்தினையும் பிரித்தே வைக்க வேண்டும். நல்ல மனுசன்.
சந்திரன் மீண்டும் அப்பாவியாக கேட்டான். “தாத்தா வெண்ணீ எதுவும் கேட்கலையே”.
இப்போது வாசுவுக்கு கோபமே வந்து விட்டது. கொப்பளித்து விட்டார்.
“கேப்பாவடே. வெண்ணி கேப்பாவடே. அந்த நேரம் 7 மாடி ஏறி இறங்க முடியுமா? நீ போய் வாங்கிட்டு வாடே. சொன்ன கேட்கமாட்டே. எதித்தா பேசுவ?”
சந்திரனை விரட்டி விட்டார். அருகில் உள்ளவர்கள் ஏன் தாத்தா இப்படி கோபப்படுகிறார் என அவர்களையே பார்த்தனர்.
எதுவும் சொல்ல முடியாமல் பிளாக்ஸ் ஒன்றை தூக்கி கொண்டு கீழே ஒடினான் சந்திரன்.
அரை மணி நேரத்தில் மேலே வென்னீயோடு ஓடி வந்தான்.
முத்துகிளியை தேடினான். அவளை காணவில்லை. அவன் கண் அவளை தேடியது.
புரிந்து கொண்டார் தாத்தா வாசு.
“என்னடே முத்துகிளியை தேடுதீயா?”
பதில் சொல்லாமல் நின்றான்.
“வீட்டுக்கு போகச்சொல்லிட்டேன். அவளும் போயிட்டா?”
சந்திரனுக்கு கோபம் வந்தது அடக்கி கொண்டான்.
“அதான் காலையில இருந்து ஒண்ணா நின்னு இருக்கியேளே போதாது. அவா உனக்கு கிடைக்க மாட்டாடே. நான் எப்போதும் சொல்லுறது தான். முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படக்கூடாது”. அவன் காதுக்கு அருகில் வந்து வில்லத்தனமாக பேசினார்.
பாவி மனுசன் வெண்ணி வாங்க வேணுமுன்னே நம்மல விரட்டி விட்டு இருக்கான். அதுக்கப்புறம் முத்துகிளியை மெதுவா பேசி வீட்டுக்கு விரட்டிட்டான். விளங்காத மனுசன்.
அமைதியாக அருகில் தரையில் உட்கார்ந்தான். ஒரிடத்தில் சுவரில் சாய்தான். அவனுக்கு இந்த உலகத்தில் எதுவுமே இல்லாமல் போவது போல இருந்தது.
முத்துகிளி இல்லாமல் தன்னால் வாழ இயலாது. இன்றுதான் அவளின் கடைகண் பார்வை கொஞ்சம் பட்டது. யாரும் இல்லாமல் இருவரும் பேச வாய்ப்பு கிடைத்து. அதற்குள் இந்த மனுசன் வந்து எல்லாத்தையும் விரட்டி விட்டுட்டானே.
மனதுக்குள் நொந்து கொண்டான். ஆனால் விரைவாக பேச முடியவில்லை.
இருக்கட்டும் கடவுள் நல்ல வழியை காட்டுவார். நிச்சயம் என்னையும் முத்துகிளியையும் சேர்த்துவைப்பார்.
கண்ணை முடியவன் அப்படியே தூங்கி விட்டான்.
மதியம் ரத்தினத்துக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும். நர்ஸ்சிடம் கேட்டான்.
நர்ஸ் கூறியபடியே மதியம் ரசம் வைத்து ரத்தினத்துக்கு ஹோட்டலில் சாப்பாடு வாங்கி கொடுத்தான். வாசு தாத்தாவுக்கு மீன் சாப்பாடு ஆம்லேட்டோட மற்றொரு அசைவ ஹோட்டலில் வாங்கி கொடுத்தான். மனுசன் என்ன பொய் சொல்லி முத்துகிளியை அனுப்பி வைச்சாரோ தெரியலை.
உள்ளேயும் ரத்தினம் கேட்டார். “யய்யா முத்துகிளியை எங்கே?”.
“ஊருக்கு போயிட்டாங்க அய்யா”
“என் கிட்டே கூட சொல்லாம கொள்ளாம போயிட்டா. உங் கிட்ட எதுவும சொன்னாளா?” ரத்தினம் அப்பாவியாக கேட்டார்.
“இல்லை அய்யா. வாசுதாத்தா கிட்ட எதுவும் சொல்லியிருப்பாங்க போல”.
“அவ ஒரு அரை கிறுக்கன் என்னத்தையாவது சொல்லி குழப்பில்லா அவளை அனுப்பி இருப்பான்”. ரத்தினம் சொன்னது உண்மைத்தான்.
“குழப்பித்தான் அனுப்பிட்டாரு. விளங்காத தாத்தா”.ரத்தினத்திடம் சொல்ல வில்லை. மனம் நொந்தபடியே வெளியே வந்தான். ஆனால் சந்திரனையும் முத்துகிளியையும் பிரிச்ச சந்தோசத்தில அந்த மனுசன் வெறும் தரையில நல்லா காலை விரிச்சி படுத்து தூங்கி கொண்டு இருந்தார்.
சாயங்காலம். ரத்தினத்துக்கு டீ வாங்கி கொடுத்தான். நர்ஸ் இடம் கேட்டான். “அய்யாவுக்கு எதுவும் ரிசல்ட் வந்து இருக்கா?”.
நர்ஸ் சிரித்தாள். “வந்துட்டு ஆனா டாக்டர் வந்து பதில் சொல்லுவாங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றார்.
இவன் வெளியே வந்தான். டாக்டர் வரவை எதிர்பார்த்து காத்திருந்தான்.
நேரம் போகவில்லை. முத்துகிளி எப்படி ஊருக்கு போய் சேர்ந்தாள் என தெரியவில்லை.
எனவே முத்துகிளிக்கு போன் அடித்தான்.
அவள் போனை எடுத்தாள்.
“என்ன முத்துகிளி ஊருக்கு போயிட்டீங்களா? ஏன் அப்பாக்கிட்ட சொல்லாம போயிட்டீங்க?”
“தாத்தாத்தான் என்னை போகச்சொன்னாரு”.
“அதுக்காக உங்க அப்பா கிட்டே கூட சொல்லாம வந்திட்டீங்க”.
“அதான் நீங்க இருக்கீங்களே பாத்துகுவீங்கன்னு நம்பிக்கைத்தான்”.
சந்திரன் வானத்தில் பறப்பது போல இருந்தது. ஆகா முத்துகிளி நம்மை பாராட்டுகிறாள். நாம் இருப்பதால்தான் தைரியமாக வீட்டுக்கு வந்திருக்கிறாள்.
“இல்லை. என் கிட்ட கூட சொல்லாம வந்திட்டீங்க” என இழுத்தான்.
“உங்க கிட்ட ஏன் சொல்லணும்”. முத்துகிளி கோபமாக கேட்டாள்.
“அட பாவமே அதுக்குள்ள வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது. இப்போது தான் நன்றாக பேசினாள். அதற்கு விதண்ட வாதம் பேசுகிறாள்”.
சந்திரன் மனம் சொன்னது. “டேய் இது காதல் விளையாட்டுடா? உன்னை சீண்டிப்பார்க்கிறாள் முத்துகிளி”.
நல்லா சீண்டி பார்த்தாள். பாவம் சந்திரனுக்கு மனது வலிக்கிறது அல்லவா? நினைத்துப்பார்க்கிறளா?
“சரி. ரிசல்ட் வந்துட்டா”.
“வந்துட்டு. ஆனால் டாக்டர் வரட்டுமுன்னு நர்ஸ் சொல்லிட்டாங்க”.
“எதுவும் இருந்தா பாத்துச்சொல்லுங்க. அப்பாவுக்கு நல்லபடியா ரிசல்ட் வரணும். எல்லோரும் என்னை பயங்காட்டுதாங்க. அதனால தான் என்னால அங்க நிக்கமுடியலை.
“பயப்படாதீங்க”. ஆறுதல் சொன்னான் சந்திரன்.
“அடைப்பு நிறைய இருந்தா பைபாஸ் ஆபரேசன் பண்ணணுமாம். அப்படி பண்ணுனா எங்க அப்பா உடம்பு தாங்காது”. அழுது விட்டாள்.
“அப்படியெல்லாம் . ஒண்ணும் ஆவாது தைரியமா இருங்க”.
சிறிது நேரம் அமைதி. “அப்பாவை நல்லா பாத்துக்காங்க”.
கவலை படாதீங்க. நான் பார்த்துகிறேன்.
“வாசுதாத்தா எங்க இருக்காவ”.
“மனுசன் வெறும் தரையில நல்லா படுத்து குறட்டை விட்டு தூங்குறாரு”.
“அய்யோ பாவம் ராத்திரி புறாவும் பருத்தி வயலுக்கு தண்ணீ பாய்ச்சி இருக்காரு. அதான் அலுப்பா இருக்கும்”.
அமைதிய இருந்தான். “அலுப்பா மனுசனுக்கு. என்னையும முத்துகிளியையும் பிரிச்சி விட்டுட்டோமுன்னு சந்தோசத்துல தூங்குதாரு. ஒரு அம்மி கல்லு இருந்தா அவரு தலையில தூக்கி போடனும் . மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.
“என்னை சத்தத்தை காணோம்”.
“ஒண்ணுமில்லை”.
“ அதானே வாசு தாத்தா தலையில எதுவும் அம்மி கல்லை தூக்கி போடப்போயிட்டீங்களோன்னு நினைச்சேன்”.
முத்துகிளி சோகமாக சிரித்தாள்.
ஆகா வர வர கொஞ்சம் கொஞ்சமாக கனி கனிந்து வருது. நிச்சயம் முத்துகிளி என்னை கல்யாணம் செய்ய சம்மதிப்பாள்.
சந்தோசத்துடன் இருந்தான் சந்திரன். ஆனால் அங்கு வேறு ஒரு சம்பவம் நடந்தது.
(முத்துகிளி தொடர்ந்து கூவுவாள்)


