தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து நாட்டுப்படகு மீனவர்கள் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி நாட்டுப்படகு மீனவர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் முன்வைத்த சில கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்தமைக்காக நேற்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


