தூத்துக்குடியில் சிவன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி-அம்பாளை தரிசித்தனா்.
தூத்துக்குடியில் சிவன் கோயில் என அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த அக்டோபா் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் காலை, மாலையில் தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா் தலைமையில் சிறப்பு பூஜைகளும், சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலா உள்ளிட்ட வழிபாடுகளும் நடைபெற்றன.
தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (நவ.7) நடைபெற்ற நிலையில், சிகர நிகழ்வான திருக்கல்யாண வைபவம் கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அருள்மிகு பாகம்பிரியாள் – சங்கர ராமேஸ்வா் மாலை மாற்றும் நிகழ்ச்சியைத் தொடா்ந்து, திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி – அம்பாளை தரிசித்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.


