தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் தீபாவளி பட்டாசுகள் சிறப்பு விற்பனை துவங்கியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் எட்டயபுரம் சாலையில் அமைக்கப்பட்ட சிறப்பு விற்பனையகத்தில் தீபாவளி பட்டாசுகள் சிறப்பு விற்பனையை மாவட்ட பொது விநியோகத்திட்டத் துணைப் பதிவாளர் சுப்புராஜ் துவக்கி வைத்தார். இதில் பண்டகசாலையின் மேலாண்மை இயக்குநர், பொதுமேலாளர், மேலாளர் மற்றும் அனைத்துப் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும் பண்டகசாலையின் 134, கிரேட் காட்டன்ரோடு என்ற முகவரியில் பழைய தாலுகா அலுவலகத்திற்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள விற்பனை நிலையம் நவ.6ம் தேதி முதல் விற்பனையை துவக்கி உள்ளது. இந்த இரு விற்பனை பிரிவுகளிலும் உலக தரம் மிக்க ஸ்டாண்டர்டு, அயன், இரட்டைக்கிளி மற்றும் தாமோ நிறுவன பட்டாசுகளின் அணிவகுப்பில் சிறு குழந்தைகளுக்கான புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு குவிந்துள்ளன.
சிவகாசி பட்டாசுகள் நிறுவன விலையில் இருந்து 5% தள்ளுபடி விலையில் கணினி பில் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, குறைந்த விலையில் பொதுமக்கள் அனைவரும் தீபாவளி பட்டாசுகளை வாங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையினை அணுகுமாறு பண்டகசாலையின் மேலாண்மை இயக்குநர் இளமாறன் கட்டுக்கொண்டுள்ளார்.


