தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள செக்காரக்குடியில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் அதிக அளவில் வெள்ள நீர் வந்தது.
இதற்கிடையில் செக்காரக்குடியில் உயர்மட்டப் பாலப்பணிகள் நடந்து வரும் நிலையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளத்தால் தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் ஊருக்குள் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக மேலச்செக்காரக்குடி, நடுச்செக்காரக்குடி, கீழச்செக்காரக்குடியில் உள்ள 4 அரசு யூனியன் பள்ளிகள் மற்றும் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 5 அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


