தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘சட்டமன்ற நாயகர் – கலைஞர்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற ‘சட்டமன்ற நாயகர் – கலைஞர்’ என்ற தலைப்பிலான கருத்தரங்க நிகழ்வில் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முன்னாள் சட்டப்பேரவை செயலாளர் செல்வராஜ், திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், கணேஷ்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


