தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் ஸ்பிக்நகர் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி, ஸ்பிக்நகர் ரோட்டரி சங்கம் சார்பில் “சூரிய ஆற்றலை பயன்பாட்டிற்குக் கொண்டு வருதல்” என்ற தலைப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புகளில் பயிலும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி (தமிழ் மற்றும் ஆங்கிலம்), ஓவியப்போட்டி, படத்தொகுப்பு உருவாக்குதல் மற்றும் மாறுவேடப்போட்டி முதலிய ஐந்து போட்டிகள் நடைபெற்றது.
இதில் 13 பள்ளிகளைச் சேர்ந்த 65 மாணவ, மாணவிகள் போட்டிகளில் கலந்துகொண்டனர். ஸ்பிக்நகர் ரோட்டரி சங்கத்தின் உதவி ஆளுநர் இராதாகிருஷ்ணன், ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் ரமேஷ் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். கல்லுரிப் பேராசிரியர்களும் ஸ்பிக்நகர் ரோட்டரி சங்க உறுப்பினர்களும் நடுவர்களாகப் பங்கேற்றனர்.
தூத்துக்குடி காமாட்சி வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியின் செயலர் அருணாசலம் நிறைவுவிழா உரையாற்றி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளையும், சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரி செயலர் முரளிதரன் மற்றும் கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி, ஒருங்கிணைப்பாளர்களும் உதவிப் பேராசிரியர்களுமான லாவண்யா, வினோதினி சில்வியா ஆகியோர் செய்திருந்தனர்.


