கொங்கராயகுறிச்சி வீரபாண்டீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோயிலாகும். இந்த கோயிலில் தேற்பிறை அஷ்டமி பூஜை மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த கோயிலுக்-கு தற்போது பக்தர்கள் வருகை பெருகியுள்ளது. விரைவில் இந்த கோயில் கும்பாபிசேகம் நடைபெற உள்ளது. இந்த கோயில் உதயதார் நிதியில் இரும்பு உண்டியல் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த உண்டியலில் முதல் காணிக்கையை செலுத்தி பக்தர்கள் பயன்பாட்டுக்கு கோயில் அறங்காவலர் தியாகராஜன் கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் சங்கர், ஆய்வர் நம்பி, செயல் அலுவலர் கோகுல மணிகண்டன், அர்ச்சகர் குணசேகர பட்டர், திருக்கோயில் பணியாளர்கள் குமரன், இசக்கிபாண்டி, விஸ்வநாத் உள்பட பக்தர்கள் கலந்துகொண்டனர்.


