கொங்கராயகுறிச்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 6 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கொங்கராயக்குறிச்சியில் இன்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
இதில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கலந்து கொண்டு துறை சார்ந்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சிகளை பார்வையிட்டார். அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றி துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்து கூறினார். பின்னர் ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். அவருடன் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜும் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதை தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், கொங்கராயகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் ஆபிதா சலாம், ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


