டாக்டர் அம்பேத்கர் விருது பெற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தோர் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.,
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு ஆண்டு தோறும் திருவள்ளுவர் திருநாளன்று அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. 2023-2024 ஆம் நிதியாண்டில் டாக்டர் அம்பேத்கார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) விருதுத்தொகையும். 8 கிராம் தங்கப்பதக்கமும் இதர செலவினங்களுக்கு ரூ.65,000/- (அறுபத்து ஐந்தாயிரம் மட்டும்) சேர்த்து ஆக மொத்தம் ரூ.5,65,000/- (ஐந்து இலட்சத்து அறுபத்தைந்தாயிரம் மட்டும்) வழங்கப்படும்.
மேற்படி விருது பெறுவதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மக்களின் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையினை உயர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்டவராகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகிய விவரங்கள் அதற்குரிய ஆதாரங்களுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் 2023 நவம்பர்; 15-க்குள் தெரிவிக்கும்படி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.


