கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சர்.சி.வி ராமன் பிறந்த தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் மன்றத்தின் சார்பில் சர்.சி.வி ராமன் பிறந்த தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏபிகே பழனிச்செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் பள்ளி பொருளாளர் ரத்னராஜா, பள்ளி குழு உறுப்பினர்கள் தாழையப்பன், தங்கமணி, திருபால்ராஜ், மனோகரன் ஆலோசனையின்படியும் நடந்தது.
நவ-7ம் தேதி இந்திய அறிவியலின் தந்தை சர்.சி.வி. ராமன் பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் கழிவுசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு அறிவியல் படைப்புகள் இடம் பெற்றன. அறிவியல் கண்காட்சியினை கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர். கடந்த 5ம் தேதி வள்ளியூரில் நடந்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மண்டல அளவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் பிரபு தலைமை வகித்தார். கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார்.பள்ளி அறிவியல் ஆசிரியர் இந்துமதி அனைவரையும் வரவேற்றார்.தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மண்டல அளவில் கலந்துகொண்ட மாணவர்கள் ஹரிஹரன், சூரிய பிரகாஷ் ஆகியோருக்கு பள்ளி முதல்வர் பிரபு சான்றிதழ் வழங்கினார். இதில் அறிவியல் மன்ற ஆசிரியர்கள் ராஜா, ரேகா, காளீஸ்வரி, ராமமூர்த்தி உள்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் அறிவியல் ஆசிரியை கீதாராணி நன்றி கூறினார்.


