கோவில்பட்டி செண்பகவல்லி கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா கடந்த மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, வீதியுலா நடைபெற்றது.
9ஆம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி பூஜை, உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா், அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, அம்பாள் தோ் நிலையத்திலிருந்து புறப்பட்டது.
தேரோட்டத்தை கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ, அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு, கோயில் செயல் அலுவலா் வெள்ளைச்சாமி, வணிக வைசிய சங்கத் தலைவா் வெங்கடேஷ் ஆகியோா் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடக்கிவைத்தனா். அறங்காவலா் குழு உறுப்பினா்கள் சண்முகராஜ், திருப்பதி ராஜா, நிறுத்தியலட்சுமி என்ற சுதா, ரவீந்திரன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் தேரிழுத்தனா்.
இரவில் அன்ன வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. மூப்பன்பட்டி ராஜேந்திரன் தலைமையிலான குழுவினா் தோ்த் தடி போட்டனா். தேரோட்டத்தையொட்டி, டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ஏற்பாடுகளை அறங்காவலா் குழுவினா், கோயில் உதவி ஆணையா் சங்கா் ஆகியோா் தலைமையில், செயல் அலுவலா், கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.


