கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் காந்தி மண்டபத்தில் வீரமாமுனிவர் பிறந்தநாள் விழா கவிஞர் இளசை அருணா அவர்களின் நினைவேந்தல் , புகழ் அஞ்சலி மற்றும் உள்ளாட்சி தினவிழா நடந்தது. கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றம் துணைத்தலைவர் நற்குணப்பேராளர் திருமலை முத்துசாமி தலைமை வகித்தார். அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் சங்க தலைவர் ந. சுப்பையா முன்னிலை வகிததார். கழுகுமலை புகைப்படக் கைலைஞர் கணபதி பால்மாரி வரவேற்றார். வீரமாமுனிவர் , கவிஞர் இளசை அருணா புகைப்படத்தினை ஓய்வு பெற்ற நீதிபதி சரவணபெருமாள் திறந்து வைத்தார். அமைப்பாளர் பாலசுப்பரமணியன் நன்றி கூறினார். இதில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு விருது வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பேர்ட்ஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.


