செய்துங்கநல்லூரில் உள்ள பழமையான சிவன் கோயில் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் வருகிற 9 ந்தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக அதிகாலை நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிசேகம், அலங்காரம் ஆராதனை நடைபெறும். இரவு 6 மணிக்கு சிவன் சக்திக்கு சீர்வரிசை தட்டுடன் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும். இந்த திருக்கல்யாணம் முடிந்து சிறப்பு சப்பர பவணி உண்டு. பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர் முத்துராமன் தலைமையில் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குரு மாரியப்பன் மற்றும் ஆனமிக பேரரவை செய்து வருகிறது.


