தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு, முன்னாள் அமைச்சரும், அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் உள்பட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு அதிமுகவினர் மத்தியில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு பேசுகையில்,
இந்த பூத் கமிட்டிக்காக வடக்கு மாவட்டத்தில் நானும், தெற்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் அண்ணன் எஸ்.பி.சண்முகநாதன் அவர்களும் இணைந்து செய்து வருகிறோம். ஏன் என்று சொன்னால் தமிழ்நாட்டிலேயே எதிர்பார்க்கின்ற தொகுதியாக தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இருக்கும். இதில் அதிமுக சார்பில் யார் நின்றாலும் அவரை வெற்றி பெற வைப்பேதே நமது கடமை. கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் வெற்றி வாய்ப்பு நமக்கு தான் இருந்தது. ஆனால் திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நமது வெற்றியை பறித்து விட்டார்கள். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்தேர்தலும் வர வாய்ப்பு உள்ளதாக டெல்லியில் இருந்து சில தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. எனவே நாம் அனைத்தையும் எதிர்பார்த்து தான் காத்திருக்கின்றோம். எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் இந்த கூட்டத்தில் பூத்து கமிடிட்டி மேலிட பொருப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னிர் செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள், ஸ்ரீவைகுணடம் மேற்கு ஒன்றிய செலாளர் காசிராஜன், கருங்குளம் தெற்கு ஒன்றிய பேரரவை செயலாளர் ஐயப்பன் உள்பட
ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் ஒன்றியச் செயலாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கருங்குளம் ஒன்றிய செயலாளர் பரமசிவ பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் செய்திருந்தனர்.


