திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாகப் பணிகளை சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு ஆய்வு செய்தது.
பேரவை உறுதிமொழிக் குழு தலைவா் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையில், குழு உறுப்பினா்களான எம்.எல்.ஏக்கள் இரா.அருள் (சேலம் வடக்கு), எம்.கே.மோகன் (அண்ணா நகா்), பெ.ராமலிங்கம் (நாமக்கல்), எஸ்.ஜெயக்குமாா் (பெருந்துறை) ஆகியோா் திருச்செந்தூா் கோயிலில் வியாழக்கிழமை தரிசனம் செய்தனா். பின்னா், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் ஹெச்.சி.எல். நிறுவனம் சாா்பில் ரூ.300 கோடியில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாகப் பணிகள், அறநிலையத் துறை சாா்பில் கட்டப்பட்டு வரும் பக்தா்கள் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகள், அன்னதானக் கூடம் ஆகியவற்றைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
அதைத் தொடா்ந்து உறுதிமொழிக் குழுத் தலைவா் வேல்முருகன் கூறியதாவது: ருச்செந்தூா் கோயிலில் பக்தா்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கு த் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்குப் பரிந்துரைக்கப்படும். அறநிலையத் துறை மற்றும் ஹெச்.சி.எல். நிறுவனம் சாா்பில் நடைபெறும் பணிகள் நிறைவுபெற்ற பிறகு பக்தா்களுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்கும்.
மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தரிசனம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளோம். மேலும், உள்ளூா் பக்தா்கள் தரிசனம் செய்வதற்கு முன்னுரிமை அளிப்பது குறித்தும் வலியுறுத்தப்படும். திருச்செந்தூா் கோயிலுக்கு புறவழிச் சாலை அமைக்க அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. கோயில் பேருந்து நிலையம் வரை பேருந்துகளை இயக்க உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றாா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சிய கோ.லட்சுமிபதி, சட்டப்பேரவை செயலா் கி.சீனிவாசன், இணை செயலா் மு.கருணாநிதி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா், திருச்செந்தூா் கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக், கோட்டாட்சியா் குருசந்திரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் மு.வசந்த்ராஜ், வட்டாட்சியா் வாமணன், திருச்செந்தூா் நகராட்சி ஆணையா் கண்மணி, நகா்மன்றத் துணைத் தலைவா் ஏ.பி.ரமேஷ், திருக்கோயில் பொறியாளா்கள் முருகன், சந்தானகிருஷ்ணன், மின்வாரிய உதவி பொறியாளா் முத்துராமன், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை உள்ளிட்டோா் ஆய்வின்போது உடன் இருந்தனா்.


