தூத்துக்குடியில் திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப் – சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தம்பதியினரின் மணி விழா நடைபெற்றது.
தூத்துக்குடியில் என்.பெரியசாமி கல்வி அறக்கட்டளை நிறுவனரும், தூத்துக்குடி கீதாகல்வி குழுமங்களின் செயலாளரும் மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளருமான ஜீவன்ஜேக்கப்- வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தம்பதியினரின் மணிவிழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு காலையில் கலெக்டர் லட்சுமிபதி, எஸ்பி பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், தொழிலதிபரும், வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளருமான எஸ்டிஆர் பொன்சீலன், உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஜீவன் ஜேக்கப்- அமைச்சர் கீதாஜீவன் தம்பதியினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள மகிழ் அக்வா நிறுவன அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜீவன் ஜேக்கப்- அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தங்கள் ஊழியர்கள் மத்தியில் கேக் வெட்டி மணி விழாவினை கொண்டாடினர். இதில், டாக்டர் மகிழ்ஜான் சந்தோஷ் மற்றும் ராஜாசிங், சுடலைராஜ், தினகரன், மீனாட்சி சுந்தரம், சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் தூத்துக்குடி ஏவிஎம் கமலவேல் மஹாலில் மணிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் வரவேற்புரையாற்றினார். பனிமயமாதா கோவில் பங்குதந்தை குமார்ராஜா மாதா படம் வழங்கி ஆசீர்வதித்தார். பின்னர் மாலை மாற்றிக்கொண்டு கேக் வெட்டினார்கள்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் நன்றி தெரிவித்து பேசுகையில் “எனது தந்தை என்.பெரியசாமி என்னை அரசியலில் அறிமுகப்படுத்தி கொண்டு வந்தார். முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்ததுதான் என்னுடைய முழுமையான பணிகளை செய்வதற்கும் ஊக்கமாக அமைந்தது. அவர்களுடைய இந்த ஒத்துழைப்பு மற்றும் ஆதரவினால் தான் நான் அரசியலில் இந்த அளவு வளர்ந்துள்ளேன். எனது குடும்பத்தினரும் எனக்கு பின்பலமாக இருந்து கொடுத்த ஆதரவு தான். எனக்கு இவ்வளவு பெரிய வெற்றியை கொண்டு வந்துள்ளது. இன்று எனக்கு கிடைக்கும் பாராட்டும், புகழ்ச்சியும் கழக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினையே சாரும் என்றார்.
விழாவில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, முன்னாள் எம்.எல்.ஏ சுடலையாண்டி, வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், மாநில காங்கிரஸ் துணை தலைவர் ஏபிசிவீ சண்முகம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிஎஸ் முரளிதரன், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர் அர்ஜுனன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், மாநகர செயலாளர் ஞானசேகர், தமாகா வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல், விசிக மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன், வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் ரமேஷ்,
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விநாயகாரமேஷ், மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், இலக்கிய அணி துணை செயலாளர் மகாராஜன், இளைஞர் அணி அமைப்பாளர் சரவணப்பெருமாள், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், இராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தொழிலதிபர்கள் போர்ட் சிட்டி சூர்ய மூர்த்தி, பிரேம்வெற்றி, ஜோ பிரகாஷ், டேவிட், செல்வின் பிரபு, அண்ணாமலைச்சாமி, ஆறுமுகச்சாமி, சிவராமன், அமைச்சரின் அலுவலக பணியாளர்கள் மணி, அல்பட் பிரதீப், கோபிநாத், உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்கள்.


